
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஜோ ரூட், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக கடந்த 5 ஆண்டுகளாக இருந்துவந்தார். அவரது கேப்டன்சியில் இங்கிலாந்து அணி 64 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றி மற்றும் 26 தோல்விகளை அடைந்துள்ளது.
ஜோ ரூட்டின் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டுவந்த இங்கிலாந்து அணி, கடந்த 2 ஆண்டுகளாக படுமோசமாக சொதப்பிவருகிறது. சொந்த மண்ணில் இந்தியாவிடம் படுதோல்வி, ஆஷஸ் தொடரை 0-4 என ஆஸ்திரேலியாவிடம் இழந்தது என படுதோல்விகளை அடைந்துவந்தது.
ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி கடைசியாக ஆடிய 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் படுதோல்வி அடைந்துவரும் நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து ஜோ ரூட் விலகியுள்ளார்.