காசு வாங்கிட்டு ஃபைனலில் படுமோசமா பேட்டிங் ஆடிய முன்னாள் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் வீரர்கள் கைது

By karthikeyan VFirst Published Nov 7, 2019, 12:07 PM IST
Highlights

பணத்திற்காக மந்தமாக பேட்டிங் ஆடி அணியை தோற்கடித்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு கர்நாடக வீரர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 
 

கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் ரஞ்சி வீரர்கள் சிஎம் கௌதம் மற்றும் அப்ரார் காசி ஆகிய இருவரையும் கர்நாடக போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 2019 கர்நாடக பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில், காசு வாங்கிவிட்டு மந்தமாக பேட்டிங் ஆடி, இவர்கள் அணியை தோற்கடித்துள்ளனர். 

பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் சிஎம் கௌதம். அதே அணியில் ஆடியவர் அப்ரார் காசி. கர்நாடக பிரீமியர் லீக் 2019 சீசனின் இறுதி போட்டியில் பெல்லாரி டஸ்கர்ஸ் அணியும் ஹூப்ளி டைகர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் மந்தமாக பேட்டிங் ஆடுவதற்காக 20 லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்டு இருவரும் படுமோசமாக ஆடியுள்ளனர். அதிலும் பெல்லாரி அணியின் கேப்டனான சிஎம் கௌதம், 37 பந்துகளில் வெறும் 2 பவுண்டரியுடன் 29 ரன்கள் அடித்தார். 

அந்த போட்டியில் 153 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் வீரர் தேவ்தத் படிக்கல் அதிரடியாக ஆடி 48 பந்துகளில் 68 ரன்களை குவித்தும் கூட, கௌதமின் மந்தமான பேட்டிங்கால் அந்த அணியால் இறுதியில் இலக்கை எட்ட முடியாமல் போனது. 8 ரன்கள் வித்தியாசத்தில் பெல்லாரி அணி தோற்றது. இந்த போட்டியில் மட்டுமல்லாது பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காசு வாங்கிவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட சிஎம் கௌதம் மற்றும் அப்ரார் காசி உட்பட நான்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட மொத்தம் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் இன்னும் சிலர் கைது செய்யப்படலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். 

சிஎம் கௌதம் ஐபிஎல்லில் 2010ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை ஆர்சிபி அணியிலும் 2014ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியிலும் இடம்பெற்றிருந்தார். கைதான மற்றொரு வீரரான காஸியும் ஆர்சிபி அணியில் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!