அடிக்கடி காயம் ஏற்படுது, உள்ளூரிலும் விளையாடுறதுல, இதுல கேப்டனா? ஹர்திக் பாண்டியாவை விமர்சித்த பிரவீன் குமார்!

By Rsiva kumarFirst Published Mar 13, 2024, 1:01 PM IST
Highlights

அடிக்கடி காயம் ஏற்படுகிறது, உள்ளூர் போட்டியிலும் விளையாடுவதில்லை, இதில் இவர் கேப்டனான என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரவீன் குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியும், ஆர்சிபி அணியும் மோதுகின்றன. இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியானது தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 24ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரவீன் குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நடந்த 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது ஹர்திக் பாண்டியா காயம் அடைந்த நிலையில், தொடரிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு ரஞ்சி டிராபி உள்ளிட்ட எந்த உள்ளூர் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை.

ஐபிஎல் தொடருக்கு 2 மாதங்களுக்கு முன்பு காயம் அடைகிறார், நாட்டிற்காகவும் விளையாடவில்லை, உள்நாட்டு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அப்படியிருக்கும் போது நேரடியாக ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுகிறார். அப்படி செய்யலாமா? பணம் சம்பாதிப்பது தவறில்லை. மாநிலத்திற்காகவும், நாட்டிற்காகவும் விளையாட வேண்டும் அல்லவா, இப்போது ஒவ்வொருவரும் ஐபிஎல் தொடருக்காக மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், ஐபிஎல் 2024 தொடருக்கு முன்னதாகவே ரோகித் சர்மாவை மீண்டும் கேப்டனாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த சில ஆண்டுகளாக ரோகித் சர்மாவின் பேட்டிங் சிறப்பாக இல்லை. ஆதலால், அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்று அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!