கேப்டனை மாற்றுவதற்கான நேரம் இது – மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கு மனோஜ் திவாரி ஆலோசனை!

By Rsiva kumar  |  First Published Apr 2, 2024, 1:37 PM IST

மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில், தற்போது கேப்டனை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.


நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு முன்னதாக முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது விளையாடிய முதல் போட்டியிலேயே 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மோசமாக பந்து வீசி 277/3 ரன்கள் அடிக்கவிட்டது. இதில், பின்னர் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 246/5 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அவே மைதானத்தில் நடந்த போட்டி என்பதால் 2 போட்டியிலும் தோல்வி அடைந்திருக்கும். சரி, ஹோம் மைதானத்தில் போட்டி நடந்தால் அந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

ஆனால், டிரெண்ட் போல்ட் மற்றும் நந்த்ரே பர்கர் ஆகியோரது வேகத்தில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக கோல்டன் டக்கில் வெளியேறவும், சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த யுஸ்வேந்திர சஹால் சுழலில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரும், மேற்கு வங்க மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரான மனோஜ் திவாரி இது தான் சரியான தருணம். மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இந்த தருணத்தை பயன்படுத்தி மீண்டும் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என்று கூறியுள்ளார்.

முடிவெடுப்பதில் தயக்கம் காட்ட கூடாது. ஹர்திக் பாண்டியாவிடமிருந்து கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிற்கு திரும்ப ஒப்படைக்கலாம். இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் ஒரு புள்ளி கூட பெறவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்ஸி சிறப்பாக இல்லை என்று கூறியுள்ளார். வரும் 7 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

click me!