இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரருக்கு கொரோனா..!

By karthikeyan VFirst Published Jul 12, 2020, 6:07 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சௌஹானுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 
 

இந்திய அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சௌஹானுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.5 லட்சத்தை கடந்துவிட்டது. இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் பாதிப்பு எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாமிடம் வகிக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றன. 

இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் உத்தர பிரதேச மாநில விளையாட்டுத்துறை அமைச்சருமான சேத்தன் சௌகானுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சாமானியர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பாரபட்சமின்றி அச்சுறுத்தும் கொரோனாவிற்கு சிக்குவதில், விளையாட்டு வீரர்கள் மட்டும் விதிவிலக்கல்ல.  

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் அஃப்ரிடி, டௌஃபிக் ஓமர் மற்றும் தற்போதைய வீரர்கள் சிலருக்கும் கொரோனா உறுதியானது. இந்நிலையில், இந்தியாவில் முதல்முறையாக கொரோனாவிற்கு கிரிக்கெட் வீரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சேத்தன் சௌகான், இந்திய அணிக்காக 1969ம் ஆண்டிலிருந்து 1981ம் ஆண்டுவரை ஆடினார்.

இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2084 ரன்களை அடித்துள்ளார். 7 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே சேத்தன் சௌகான் ஆடினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கவாஸ்கருடன் இணைந்து தொடக்க வீரராக இறங்கி அசத்தலாக ஆடியவர் சேத்தன் சௌகான். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் பொறுப்பு வகித்த சேத்தன் சௌகான், எம்பியாகவும் இருந்துள்ளார். தற்போது, உத்தர பிரதேசத்தில் அமைச்சராக உள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதையடுத்து, லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். 

சேத்தன் சௌகான், டெஸ்ட் கிரிக்கெட்டி, ஒரு சதம் கூட அடிக்காமல் 2000 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!