கொரோனாவிற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பலி..! பிரதமர் மோடி இரங்கல்

Published : Aug 16, 2020, 07:23 PM IST
கொரோனாவிற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பலி..! பிரதமர் மோடி இரங்கல்

சுருக்கம்

கொரோனாவிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், உத்தர பிரதேச மாநில விளையாட்டுத்துறை அமைச்சருமான சேத்தன் சவுஹான் உயிரிழந்துள்ளார்.  

கொரோனாவிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், உத்தர பிரதேச மாநில விளையாட்டுத்துறை அமைச்சருமான சேத்தன் சவுஹான் உயிரிழந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுஹான். இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள சேத்தன் சவுஹான், 179 முதல் தர போட்டிகளில் ஆடி 11,143 ரன்களை குவித்துள்ளார். 26 லிஸ்ட் ஏ போட்டிகளில் ஆடியுள்ளார். 

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு பாஜகவில் சேர்ந்து அரசியலில் இறங்கினார். 2 முறை மக்களவை தொகுதி எம்பியாக இருந்த சேத்தன் சவுஹான், தற்போது உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். 

இந்நிலையில், அவருக்கு கொரோனா உறுதியான நிலையில், குருக்ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். 73 வயதான சேத்தன் சவுஹான், கொரோனாவால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாஜக பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?