பாஜகவில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன்

Published : Dec 30, 2020, 02:05 PM IST
பாஜகவில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன்

சுருக்கம்

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார்.  

1983ல் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் அறிமுகமான லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன், இந்திய அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அவர் ஆடியதில்லை. முதல் தர கிரிக்கெட்டில் 76 போட்டிகளில் ஆடியுள்ளார்.

ரிஸ்ட் ஸ்பின்னரான லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன், 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காத லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன், 1986ம் ஆண்டு ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட்டில் கடைசியாக ஆடினார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் வர்ணனையாளராக இருந்துவரும் லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup 2026: வங்கதேச அணி இந்தியா வருவதை தடுத்தது பாகிஸ்தான்.. பிசிசிஐ பகீர் குற்றச்சாட்டு!
டி20 உலகக் கோப்பைக்கு கடப்பாரை டீமை களமிறக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. சிக்சர் மழைக்கு ரெடியா?