ஃப்ளைட்டில் பக்கத்தில் இருந்த பெண்களுடன் என்ன செய்தார்..? அதிரடியாக இறக்கிவிடப்பட்ட முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்

By karthikeyan VFirst Published May 21, 2019, 1:20 PM IST
Highlights

ஐபிஎல்லில் வர்ணனையாளராக இருக்கும் அவர், உலக கோப்பை வர்ணனையாளர்கள் பட்டியலிலும் உள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான மைக்கேல் ஸ்லேட்டர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் 1993ம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணிக்காக ஆடியவர். 74 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார். 

ஐபிஎல்லில் கூட வர்ணனையாளராக இருக்கிறார். 2019 உலக கோப்பைக்கான வர்ணனையாளர்கள் பட்டியலில் கூட மைக்கேல் ஸ்லேட்டர் உள்ளார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் சிட்னியிலிருந்து வாகாவிற்கு செல்லும்போது ஃப்ளைட்டில் சீட் விவகாரத்தில் பக்கத்தில் இருந்த பெண்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதும் அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்காக பாத்ரூமிற்குள் சென்று பூட்டிவிட்டு, வெளியேவர மறுத்ததாகவும் சக பயணி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து ஃப்ளைட்டில் இருந்து ஸ்லேட்டர் இறக்கிவிடப்பட்டார். சக பெண் பயணிகளிடம் காரசாரமான வாதம் செய்தது உண்மை தான் என்றும், அது சக பயணிகளுக்கு தொல்லையாக இருந்திருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் ஸ்லேட்டர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அவர் பாத்ரூமிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு வெளியேவர மறுத்ததாக கூறப்படும் தகவலை ஸ்லேட்டர் தரப்பு மறுத்துள்ளது. 
 

click me!