இந்தியாவிற்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்ததன் மூலமாக 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 4 போட்டிகளில் இங்கிலாந்து தோல்வி அடைந்து மோசமான சாதனை படைத்துள்ளது.
இந்தியா நடத்தும் 13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வரலாற்றில் முதல் முறையாக மோசமாக சாதனை படைத்துள்ளது. உலகக் கோப்பை 2023 கிரிக்கெட்டின் முதல் போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வி அடைந்தது. அதன் பிறகு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அதிகபட்சமாக 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து தொடர்ந்து 4 போட்டிகளில் இங்கிலாந்து தோல்வி:
ஆப்கானிஸ்தான் – 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
தென் ஆப்பிரிக்கா – 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
இலங்கை – 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
இந்தியா – 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 29ஆவது லீக் போட்டி லக்னோவில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் விளையாடிய 229 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக ரோகித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் முன்வரிசை வீரர்களான ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக லியாம் லிவிங்ஸ்டன் 27 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இங்கிலாந்து 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதே போன்று இதற்கு முன்னதாக நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து 200 ரன்களுக்குள் ஆட்டமிழந்ததே இல்லை. ஆனால், இந்த உலகக் கோப்பை போட்டிகளில்
170 – தென் ஆப்பிரிக்கா (22 ஓவர்கள்)
156 – இலங்கை (25.4 ஓவர்கள்)
129 – இந்தியா (34.5 ஓவர்கள்)
பொறுமையாக விளையாடிய ரோகித் சர்மா – கைவிட்ட கிங் கோலி; 50 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்த இந்தியா!
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், அடில் ரஷீத் மற்றும் மார்க் வுட் என்று 6 வீரர்கள் கிளீன் போல்டு முறையில் ஆட்டமிழந்துள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக கிழக்கு ஆப்பிரிக்கா அணியின் 7 வீரர்கள் கிளீன் போல்டு முறையில் ஆட்டமிழந்துள்ளனர்.
IND vs ENG: முன்னாள் சுழல் ஜாம்பவான் மறைவு: கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிய வீரர்கள்!