தென் ஆப்பிரிக்கா தான் மோசமான சாதனைன்னா, இந்தியா அதுக்கு மேல வரலாற்று சாதனை – 153, ஒரே ஸ்கோரில் 6 விக்கெட்!

Published : Jan 03, 2024, 08:59 PM IST
தென் ஆப்பிரிக்கா தான் மோசமான சாதனைன்னா, இந்தியா அதுக்கு மேல வரலாற்று சாதனை – 153, ஒரே ஸ்கோரில் 6 விக்கெட்!

சுருக்கம்

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 153 ரன்களுக்கு ஒரே ஸ்கோரில் 6 விக்கெட்டுகளை இழந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. முதல் நாளான இன்று டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது. இதில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து குறைந்த ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை தென் ஆப்பிரிக்கா படைத்துள்ளது.

South Africa vs India 2nd Test: ஒரு ரன்னு கூட எடுக்கல, 6 விக்கெட் காலி – 46 ரன்னுக்கு அவுட்டான கோலி!

முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும், ஒட்டு மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். சிறந்த பவுலிங்காக 9 ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுகள் எடுத்து 15 ரன்கள் கொடுத்துள்ளார்.

பின்னர், இந்திய அணி முதல் இன்னிங்ஸ் விளையாடியது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் டக் அவுட்டில் வெளியேறினார். பின்னர் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் பவுண்டரியாக விளாச இந்திய அணியின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. ரோகித் சர்மா 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, கில்லும் 36 ரன்களில் வெளியேறினார்.

மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா – மீண்டு வந்து சிறப்பான சம்பவம் செய்த டீம் இந்தியா!

அடுத்து வந்த கோலி நிதானமாக விளையாட ஷ்ரேயாஸ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழக்க, ஜடேஜா 0, பும்ரா 0, சிராஜ் 0, பிரசித் கிருஷ்ணா 0 என்று வரிசையாக ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 153 ரன்களுக்கு ராகுல் விக்கெட்டை இழந்த நிலையில், அதன் பிறகு வரிசையாக 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கடைசி 11 பந்துகளுக்கு ஒரு ரன் கூட எடுக்காமல் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 153, ஒரே ஸ்கோரில் 6 விக்கெட்டுகளை இழந்து மோசமான சாதனை படைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் ஒலித்த ராம் சியா ராம் பாடல்: ஸ்ரீராமரைப் போன்று வில் அம்புகளை இழுத்து போஸ் கொடுத்த கோலி!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

சூர்யகுமார், கில்லுக்கு வாழ்வா சாவா போட்டி; தொடரைக் கைப்பற்றுமா இந்தியா..?
IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!