South Africa vs India 2nd Test: ஒரு ரன்னு கூட எடுக்கல, 6 விக்கெட் காலி – 46 ரன்னுக்கு அவுட்டான கோலி!

By Rsiva kumarFirst Published Jan 3, 2024, 8:14 PM IST
Highlights

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா முகமது சிராஜின் வேகத்தில் சிக்கி தவித்தது. கடைசியாக 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

தென் ஆப்பிரிக்காவில் ஒலித்த ராம் சியா ராம் பாடல்: ஸ்ரீராமரைப் போன்று வில் அம்புகளை இழுத்து போஸ் கொடுத்த கோலி!

Latest Videos

பின்னர் வந்த இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். இருவரும் மாறி மாறி பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்திக் கொண்டே சென்றனர். ரோகித் சர்மா 7 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்திருந்த போது நந்த்ரே பர்கர் பந்தில் மார்கோ ஜான்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா – மீண்டு வந்து சிறப்பான சம்பவம் செய்த டீம் இந்தியா!

இவரைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார். கில், கோலி இருவரும் சீரான இடைவெளியில் பவுண்டரிகள் அடித்தனர். கில் 36 ரன்கள் அடித்திருந்த போது நந்த்ரே பர்கர் பந்தில் மார்கோ ஜான்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவ்வளவு தான், அடுத்து வந்த சீனியர் வீரர் உள்பட பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஷ்ரேயாஸ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் 33 பந்துகள் பிடித்து ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரவீந்திர ஜடேஜா 0, ஜஸ்ப்ரித் பும்ரா 0, முகமது சிராஜ் 0, பிரசித் கிருஷ்ணா 0 என்று வரிசை கட்டி ஒவ்வொருவரும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

SA vs IND: சுத்து போட்ட டீம் இந்தியா, சிறப்பான சம்பவம் செய்த சிராஜ் – 55 ரன்களுக்கு காலியான தென் ஆப்பிரிக்கா!

இற்தியாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து 98 ரன்கள் முன்னிலை பெற்றது. எனினும் இந்திய அணி ஒரு ரன் கூட எடுக்காமல் 6 விக்கெட்டுகளை இழந்து மோசமான சாதனை படைத்துள்ளது.

click me!