கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மைதானத்துக்குள் தன்னை நோக்கி ஓடிவந்த ரசிகர்.. கோலி என்ன செய்தார் பாருங்க...! வீடியோ

By karthikeyan VFirst Published Feb 25, 2021, 3:30 PM IST
Highlights

அகமதாபாத்தில் நடந்துவரும் 3வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி பேட்டிங் ஆடியபோது அவரைக்காண ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் ஓடிவந்த நிலையில், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டியிருப்பதால், ரசிகரை கண்டு விலகிய கோலி, அவரை திரும்பி செல்லுமாறு வலியுறுத்தினார்.
 

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியா இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் தொடர் நடந்துவருகிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்ட்டில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், 2வது டெஸ்ட்டிலிருந்து 50 சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 

சென்னையில் நடந்த 2வது டெஸ்ட்டில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் சர்வதேச போட்டியான, 3வது டெஸ்ட் போட்டியிலும் 50 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றின் விளைவாக கிரிக்கெட் வீரர்கள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி தனிமையில் இருந்துவருகின்றனர். பயிற்சி செய்ய வரும்போதும், களத்தில் ஆடும்போதும் மட்டும்தான் ஒன்றாக இருக்கிறார்களே தவிர, ஹோட்டலில் தனித்தனியாகத்தான் இருக்கின்றனர். கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியம். அதனால் தான் கொரோனா நெறிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ரசிகர் ஒருவர் கோலியை காண மைதானத்துக்குள் ஓடிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக  வெறித்தனமான ரசிகர்கள் சிலர், தங்களது ஆஸ்தான வீரர்களை காண மைதானத்துக்குள் ஓடிவந்திருக்கின்றனர். சாதாரண நாட்களில் பரவாயில்லை; ஆனால் இப்போது அது ஆபத்தானது.

அந்தவகையில், பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்துவரும் 3வது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தில் 3வது செசனில் கோலி பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது கோலியை நோக்கி ஒரு ரசிகர் மைதானத்துக்குள் ஓடிவர, அவரைக்கண்ட கோலி, விலகி ஓடியதுடன், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டியதை சுட்டிக்காட்டி வெளியே செல்லுமாறு அறிவுறுத்த, பின்னர் அந்த ரசிகர் வெளியே சென்றார். 
 

Fan breaches security to meet Virat Kohli pic.twitter.com/qCF7QQn2hj

— Trollmama_ (@Trollmama3)
click me!