#CPL2021 டுப்ளெசிஸின் காட்டடி சதத்தால் மெகா ஸ்கோரை அடித்து செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி

Published : Sep 04, 2021, 09:37 PM IST
#CPL2021 டுப்ளெசிஸின் காட்டடி சதத்தால் மெகா ஸ்கோரை அடித்து செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி

சுருக்கம்

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஃபாஃப் டுப்ளெசிஸின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 224 ரன்களை குவித்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, 225 ரன்கள் என்ற கடின இலக்கை செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பாட்ரியாட்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.  

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பாட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாட்ரியாட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஆண்ட்ரே ஃப்ளெட்சர் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபாஃப் டுப்ளெசிஸ் தொடக்கம் முதலே அடித்து ஆடினார். 3ம் வரிசையில் இறங்கிய வீரர் 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஃபாஃப் டுப்ளெசிஸ் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆட, அவருடன் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோஸ்டான் சேஸும் அடித்து ஆடினார். அபாரமாக ஆடி சதமடித்த டுப்ளெசிஸ் 60 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 120 ரன்களையும், ரோஸ்டான் சேஸ் 31 பந்தில் 64 ரன்களையும் குவிக்க, செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 20 ஓவரில் 224 ரன்களை குவித்து, 225 ரன்கள் என்ற கடின இலக்கை பாட்ரியாட்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: நெருப்போடு மோதிட்டீங்க! என்னா அடி! இலங்கை பவுலர்களை கதறவிட்டு வைபவ் சூர்ய்வன்ஷி உலக சாதனை!
Jaiswal Century: ஜெய்ஸ்வால் சதம், ஹிட்மேன் அதிரடி; ஆப்கானிஸ்தானை ஊதித்தள்ளி தொடரை வென்றது இந்தியா