#INDvsENG 4வது டி20: இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங் தேர்வு

Published : Mar 18, 2021, 06:59 PM IST
#INDvsENG 4வது டி20: இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங் தேர்வு

சுருக்கம்

4வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டி20 போட்டி இன்று நடக்கிறது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹலுக்கு பதிலாக மற்றொரு ரிஸ்ட் ஸ்பின்னரான ராகுல் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார். சாஹலின் பவுலிங் இந்த தொடரில் எடுபடவில்லை. முதல் 3 போட்டிகளில் வீசிய 12 ஓவர்களில் 119 ரன்களை வாரி வழங்கியுள்ளார். ஒன்றிரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்திய சாஹல், ரன்களை மட்டும் வாரி வழங்கினார். அவரது பவுலிங் எடுபடாத நிலையில், ராகுல் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இடுப்பு பகுதியில் காயம் காரணமாக இஷான் கிஷன் நீக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர், ராகுல் சாஹர்.

இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் களமிறங்கிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இங்கிலாந்து ஆடுகிறது.

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், இயன் மோர்கன்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் உட்.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 'கன்னி' அரைசதத்தில் உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி! இந்தியா மாஸ் வெற்றி!
IND vs ZIM: 149 கி.மீ வேகம்.. கம்பேக் மேட்ச்சில் மரண மாஸ் காட்டிய மயங்க் யாதவ்.. வரலாற்று சாதனை!