உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேன் அவருதான்..! இங்கிலாந்து வீரருக்கு கம்பீர் புகழாரம்

Published : Mar 18, 2021, 04:59 PM IST
உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேன் அவருதான்..! இங்கிலாந்து வீரருக்கு கம்பீர் புகழாரம்

சுருக்கம்

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் தான் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. 

முதலிரண்டு போட்டிகளில் பெரியளவில் ஆடிராத இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜோஸ் பட்லர், 3வது டி20 போட்டியில், அபாரமாக ஆடி 52 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 83 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

ஜோஸ் பட்லரின் பேட்டிங்கை கம்பீர் வெகுவாக புகழ்ந்தார். ஜோஸ் பட்லர் குறித்து கம்பீரும் இயன் பெல்லும் பேசினர். பட்லர் குறித்து பேசிய கம்பீர், பட்லர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவுக்கு நிகரான சிறந்த வீரர் பட்லர். இங்கிலாந்தின் சிறந்த வெள்ளைப்பந்து பேட்ஸ்மேன் பட்லர் என்று இயன் பெல் கூறினார். ஆனால் என்னை பொறுத்தமட்டில் பட்லர் சர்வதேச அளவில் சிறந்த வெள்ளைப்பந்து பேட்ஸ்மேன் என்று புகழாரம் சூட்டினார்.

பட்லர் 145 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடி 3855 ரன்களையும், 77 டி20 போட்டிகளில் ஆடி 1662 ரன்களையும் குவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 'கன்னி' அரைசதத்தில் உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி! இந்தியா மாஸ் வெற்றி!
IND vs ZIM: 149 கி.மீ வேகம்.. கம்பேக் மேட்ச்சில் மரண மாஸ் காட்டிய மயங்க் யாதவ்.. வரலாற்று சாதனை!