டி20யில் இந்திய அணியின் பெஸ்ட் பேட்ஸ்மேன் அவரு..! 3 மேட்ச்சுல சொதப்புனா அது இல்லைனு ஆயிடுமா? விக்ரம் ரத்தோர்

By karthikeyan VFirst Published Mar 18, 2021, 2:30 PM IST
Highlights

இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான கேஎல் ராகுல், ஃபார்மில் இல்லாத இந்த சூழலில் அவருக்கு இந்திய அணி நிர்வாகத்தின் முழு ஆதரவும் இருப்பதாக பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் சரியில்லாத 2 போட்டிகளிலும் தோற்றது.

இந்திய அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவரும் அதிரடி தொடக்க வீரருமான கேஎல் ராகுல் சொதப்பலும் ஒரு காரணம். 3 போட்டிகளில் 2ல் டக் அவுட்டான ராகுல், மொத்தமாகவே 3 போட்டியில் ஒரு ரன் மட்டுமே அடித்துள்ளார். 

ராகுல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக சொதப்பினாலும், அவர் தான் இந்திய அணியின் தொடக்க வீரர் என்பதை கேப்டன் கோலி மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகிய இருவருமே உறுதி செய்தனர்.

ராகுல் குறித்து பேசிய விக்ரம் ரத்தோர், கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் சிறந்த வீரராக ராகுல் திகழ்கிறார். 145 என்ற ஸ்டிரைக் ரேட் மற்றும் 40 ரன்னுக்கும் அதிகமான சராசரியுடன் இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பு செய்துள்ளவர் ராகுல். 3 போட்டிகளில் சரியாக ஆடாததால், அவரது ரெக்கார்டுகளோ, அவர் சிறந்த வீரர் என்பதிலோ எந்த மாற்றமும் ஏற்படாது. இந்த நேரத்தில் தான் ஒரு அணியாக ராகுலுக்கு நாங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
 

click me!