#ENGvsIND சீனியர் வீரரை கழட்டிவிட்ட இந்திய அணி.. நல்ல காம்பினேஷனுடன் களமிறங்கிய கோலி&கோ..! டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Aug 4, 2021, 3:32 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நாட்டிங்காமில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இந்திய அணி எந்த ஆடும் லெவன் காம்பினேஷனுடன் களமிறங்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. பவுலிங்கில் தான் புதிய காம்பினேஷன் எடுக்கப்பட்டுள்ளது. பேட்டிங்கில் ரோஹித், ராகுல், புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பண்ட் என்ற ஆர்டர் ஏற்கனவே தெரிந்ததுதான்.

ஸ்பின்னராக ஆல்ரவுண்டர் ஜடேஜா எடுக்கப்பட்டுள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய நால்வரும் எடுக்கப்பட்டுள்ளனர். அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மா அணியில் எடுக்கப்படவில்லை. இளம் துடிப்பான, நல்ல வேகத்தில் ஸ்விங்கும் செய்து வீசக்கூடிய முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவில் அசத்திய நிலையில், அவருக்கு இங்கிலாந்திலும் ஆட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் நீண்ட ஸ்பெல் வீசமுடியாது. அப்படியே வீசினாலும் அவர் பவுலிங்கில் ஃபார்மில் இல்லை. எனவே ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். ஷர்துல் தாகூர் வேகமாக வீசமாட்டார் என்றாலும், ஸ்விங் செய்து வீசுவார். முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கக்கூடிய பவுலர் அவர்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.

இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜாக் க்ராவ்லி, ஜோ ரூட்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஆலி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
 

click me!