#ENGvsIND 3வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! உத்தேச ஆடும் லெவன்

Published : Aug 24, 2021, 10:38 PM IST
#ENGvsIND 3வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

3வது டெஸ்ட் போட்டி நாளை(25ம் தேதி) தொடங்குகிறது. அந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி முனைப்பில் களமிறங்குகின்றன. 2வது டெஸ்ட்டில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணிக்கு அடுத்த டெஸ்ட்டில் வெற்றி அவசியம். எனவே அந்த அணி வெற்றி பெறுவதில் தீவிரமாக உள்ளது.

3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 2  மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட் காயத்தால் 3வது டெஸ்ட்டிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக சாகிப் மஹ்மூத் அல்லது க்ரைக் ஓவர்டன் ஆகிய இருவரில் ஒருவர் சேர்க்கப்படுவார்.

தொடர்ந்து சொதப்பிவரும் தொடக்க வீரர் டோமினிக் சிப்ளி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டேவிட் மலான் சேர்க்கப்பட்டுள்ளார்.

உத்தேச இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், டேவிட் மலான், ஜோ ரூட்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), மொயின் அலி, சாம் கரன், ஆலி ராபின்சன், சாகிப் மஹ்மூத்/க்ரைக் ஓவர்டன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
 

PREV
click me!

Recommended Stories

Asian Games 2026: வெறும் 5 ஓவரில் ஜப்பானை ஊதித்தள்ளிய இந்திய மகளிர் அணி.. செமி பைனலுக்கு என்ட்ரி!
Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!