#ENGvsIND இந்தியாவை சமாளிக்க 3 ஆண்டுகளாக ஆடாத வீரரை மீண்டும் அணியில் சேர்த்த இங்கிலாந்து..!

By karthikeyan VFirst Published Aug 24, 2021, 9:15 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் ஆடவுள்ள டேவிட் மலான் குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேசியுள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

3வது டெஸ்ட் போட்டி நாளை(25ம் தேதி) தொடங்குகிறது. அந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி முனைப்பில் களமிறங்குகின்றன. 2வது டெஸ்ட்டில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணிக்கு அடுத்த டெஸ்ட்டில் வெற்றி அவசியம். எனவே அந்த அணி வெற்றி பெறுவதில் தீவிரமாக உள்ளது.

அதனால், 3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஒருசில மாற்றங்களை செய்கிறது. அந்தவகையில், தொடர்ச்சியாக சொதப்பிவந்த தொடக்க வீரர் டோமினிக் சிப்ளிக்கு பதிலாக டேவிட் மலான் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியில் 3ம் வரிசையில் ஆடிவந்த ஜாக் க்ராவ்லி தொடர்ச்சியாக சொதப்பிவந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டிலும் சொதப்பியதையடுத்து 2வது டெஸ்ட்டில் அவர் நீக்கப்பட்டு ஹசீப் ஹமீத் சேர்க்கப்பட்டார். 

இந்நிலையில், தொடர்ந்து சொதப்பிவந்த மற்றொரு வீரரான தொடக்க வீரர் டோமினிக் சிப்ளி நீக்கப்பட்டு டேவிட் மலான் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 கிரிக்கெட்டில் டாப் இடத்தை பிடித்துவிட்ட டேவிட் மலான், டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த நிலையில், அவருக்கான இடத்தை தக்கவைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 

2018ம் ஆண்டு பிர்மிங்காமில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் கடைசியாக ஆடிய டேவிட் மலான், 3 ஆண்டுக்கு பிறகு இப்போது மீண்டும் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட வாய்ப்பு பெற்றுள்ளார்.

இந்நிலையில், டேவிட் மலான் குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், டேவிட் மலான் எங்கள் அணியின் டாப் ஆர்டருக்கு வலுசேர்ப்பார். சிவப்பு பந்தில் ஆடிய நல்ல அனுபவம் பெற்ற வீரர் மலான். அருமையான பேட்ஸ்மேன் அவர். தன்னை தக்கவைப்பதற்காக போராடும் டேவிட் மலான், அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்துவார் என்று ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
 

click me!