#INDvsENG இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

Published : Feb 11, 2021, 09:37 PM IST
#INDvsENG இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 4 டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியுள்ளன. அதன்பின்னர் டி20 தொடர் நடக்கவுள்ளது.

ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இயன் மோர்கன் தலைமையிலான அணியில் ஆர்ச்சர், பேர்ஸ்டோ, பட்லர், ஜோர்டான், கரன் பிரதர்ஸ், மார்க் உட், பில்லிங்ஸ் உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.   

இங்கிலாந்து டி20 அணி:

இயன் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், டாம் கரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், அடில் ரஷீத், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்ளி, மார்க் உட்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: இஷான் கிஷன் புயல் வேக ஆட்டம்.. SKY மாஸ் கம்பேக்.. 15 ஓவரில் 209 ரன் சேஸ் செய்த இந்தியா!
IND vs NZ T20: விராட் கோலி சாதனையை அசால்டாக ஓவர் டேக் செய்த ஹர்திக் பாண்ட்யா!