#ENGvsIND இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

Published : Jul 22, 2021, 05:39 PM IST
#ENGvsIND இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

சுருக்கம்

இந்திய அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்தில் உள்ள இந்திய அணி மிகத்தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.

வரும் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான 17 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமிலும், ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டி லண்டனிலும் நடக்கின்றன. இந்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ், ஜாக் க்ராவ்லி, டோமினிக் சிப்ளி, பென் ஸ்டோக்ஸ், பட்லர், பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் உட், சாம் கரன் ஆகிய டெஸ்ட் வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். ஸ்பின்னர்கள் டோமினிக் பெஸ் மற்றும் ஜேக் லீச் ஆகியோர் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து டெஸ்ட் அணி:

ஜோ ரூட்(கேப்டன்), ரோரி பர்ன்ஸ், ஜாக் க்ராவ்லி, டோமினிக் சிப்ளி, ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், சாம் கரன்,  டான் லாரன்ஸ், ஆலி போப், ஆலி ராபின்சன், டோமினிக் பெஸ், ஜாக் லீச், மார்க் உட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஹசீப் ஹமீத்.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!