#ENGvsIND வெல்கம் பேக் ரிஷப் பண்ட்..! ரிஷப்புக்கு பிசிசிஐ கொடுத்த வரவேற்பு

Published : Jul 22, 2021, 04:54 PM IST
#ENGvsIND வெல்கம் பேக் ரிஷப் பண்ட்..! ரிஷப்புக்கு பிசிசிஐ கொடுத்த வரவேற்பு

சுருக்கம்

கொரோனாவிலிருந்து மீண்ட ரிஷப் பண்ட், துர்ஹாமில் உள்ள இந்திய அணியுடன் இணைந்துவிட்டார்.  

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடிவிட்டு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்திலேயே உள்ளது.

பயோ பபுள் விதிகளை பின்பற்றி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தான் வீரர்கள் உள்ளனர். ஆனாலும் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டுக்கு கடந்த 8ம் தேதி கொரோனா உறுதியானது. 

இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட ரிஷப், கிட்டத்தட்ட அவரது குவாரண்டினை முடித்துவிட்டார். அவருக்கு கொரோனா உறுதியானதால், இந்திய அணியுடன் அவர் துர்ஹாமிற்கு செல்லவில்லை.

இந்நிலையில், ரிஷப் பண்ட்டுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கடைசியாக  எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்ததையடுத்து, துர்ஹாமிற்கு சென்ற ரிஷப் பண்ட், இந்திய அணியுடன் இணைந்துவிட்டார். 

துர்ஹாமிற்கு வந்த ரிஷப் பண்ட்டை வரவேற்று பிசிசிஐ டுவீட் செய்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!