ENG vs IND: 17 ரன்னுக்கு 4 விக்கெட்.. அலறவிடும் இந்திய பவுலர்கள்.. அரண்டு நிற்கும் இங்கிலாந்து வீரர்கள்

Published : Jul 12, 2022, 06:10 PM ISTUpdated : Jul 12, 2022, 06:16 PM IST
ENG vs IND:  17 ரன்னுக்கு 4 விக்கெட்.. அலறவிடும் இந்திய பவுலர்கள்.. அரண்டு நிற்கும் இங்கிலாந்து வீரர்கள்

சுருக்கம்

முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெறும் 7 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று கெனிங்டன் ஓவலில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, க்ரைக் ஓவர்டன், டேவிட் வில்லி, ப்ரைடான் கர்ஸ், ரீஸ் டாப்ளி.

இதையும் படிங்க - ஐபிஎல்லில் ஆடும்போது ரெஸ்ட் தேவைப்படல.. இந்தியாவுக்காக ஆடுறதுனா மட்டும் வலிக்குது! சீனியர்களை விளாசிய கவாஸ்கர்

முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் களமிறங்கினர். ஜேசன் ராயை 2வது ஓவரிலேயே ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா. அதே 2வது ஓவரின் கடைசி பந்திலேயே ஜோ ரூட்டையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார்.

இதையடுத்து களத்திற்கு வந்த இங்கிலாந்து அணியின் மேட்ச் வின்னரான பென் ஸ்டோக்ஸை ஷமி டக் அவுட்டாக்கினார். ராய், ரூட், ஸ்டோக்ஸ் ஆகிய 3 முக்கியமான வீரர்களும் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, இங்கிலாந்து அணி வெறும் 7 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

இதையும் படிங்க - 11 வருஷத்துக்கு முன் சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் போட்ட டுவீட்..! இப்ப செம வைரல்

பேர்ஸ்டோ மற்றும் பட்லர் ஆகிய இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இணைந்து ஆடிவருகின்றனர். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: மாஸ் காட்டும் பாண்டியா.. 3வது T20யில் படைக்கப்போகும் புதிய சாதனை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!