உலக கோப்பை ஃபைனல் இப்படித்தான் இருக்கப்போகுது.. இங்கிலாந்து கேப்டன் மோர்கன் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 14, 2019, 11:06 AM IST
Highlights

உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், இந்த போட்டி குறித்த முக்கியமான தகவலை இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்றுடன் உலக கோப்பை தொடர் முடிவடைகிறது. இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

லண்டன் லார்ட்ஸில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி போட்டி நடக்கவுள்ளது. இந்திய அணியை போராடி வீழ்த்திய நியூசிலாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியை அசால்ட்டா வீழ்த்திய இங்கிலாந்து அணியும் இறுதி போட்டியில் மோதுகின்றன. 

இரு அணிகளுமே லீக் சுற்றில் வெற்றி தோல்விகளை சந்தித்து ஏற்ற இறக்கங்களுடன் தான் அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் சிறப்பாக ஆடி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன. இரு அணிகளுமே இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றதில்லை என்பதால் இந்த முறை உலக கோப்பையை இதுவரை தூக்காத அணி தூக்குவது உறுதியாகிவிட்டது. 

இன்று இறுதி போட்டி நடக்கவுள்ள நிலையில், இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இறுதி போட்டி ஹை ஸ்கோரிங் போட்டியாக கண்டிப்பாக இருக்காது. ஏனெனில் லார்ட்ஸ் மைதானம் ஹை ஸ்கோரிங் அடிக்கக்கூடிய மைதானம் கிடையாது. எனவே இது லோ ஸ்கோர் போட்டியாகத்தான் இருக்கும். ஆனால் போட்டி கடுமையாக இருக்கும் என்று மோர்கன் தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இந்த உலக கோப்பை தொடர் ஹை ஸ்கோரிங் தொடராக அமையும் என்றும் முதன்முறையாக ஒரு அணி 500 ரன்கள் அடிக்கக்கூடிய வாய்ப்பு கூட உள்ளது என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணி, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக அடித்த 397 ரன்கள் தான் இந்த தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இறுதி போட்டியில் ஆடும் நியூசிலாந்து அணி, இந்த தொடரில் ஒருமுறை கூட 300 ரன்களை கடக்கவில்லை. குறைந்த ஸ்கோர் அடித்தாலும், அந்த அணியின் அபாரமான பவுலிங்காலும் வில்லியம்சனின் கேப்டன்சியாலும் அதை டிஃபெண்ட் செய்து அந்த அணி வெற்றி பெற்றுவருகிறது. 
 

click me!