அந்த அறிவுப்பூர்வமான ஐடியா கொடுத்த ஆளு யாருனு தெரிஞ்சுபோச்சு.. அம்பலப்பட்ட ரகசியம்

By karthikeyan VFirst Published Jul 14, 2019, 10:09 AM IST
Highlights

முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் அந்த முடிவை தவறானது என்று கூறினாலும் வழக்கம்போலவே அந்த முடிவை நியாயப்படுத்தினார் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. அந்த போட்டியில் 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 5 ரன்களுக்கே முதல் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ரிஷப் பண்ட் களத்தில் நின்ற நிலையில், ஐந்தாம் வரிசையில் அனுபவ வீரர் தோனியை அனுப்பாமல் தினேஷ் கார்த்திக்கை அனுப்பியது மிகப்பெரிய தவறு. தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த பிறகாவது தோனி அனுப்பப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் தினேஷ் கார்த்திக் விக்கெட்டுக்கு பிறகும் பாண்டியா தான் அனுப்பப்பட்டார். ரிஷப் - பாண்டியா இருவருமே இளம் வீரர்கள் என்பதால் அந்த சூழலை எப்படி கையாள வேண்டும் என்று தெரியாமல் அவசரப்பட்டு பெரிய ஷாட்டுக்கு போயி ஆட்டமிழந்தனர். இதே தோனி, தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அனுப்பப்பட்டிருந்தால், ரிஷப் பண்ட்டை தவறான ஷாட் ஆட அனுமதிக்காமல் அவருக்கு ஆலோசனைகளை வழங்கி பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார் என்பதே முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதங்கம். 

கவாஸ்கர், கங்குலி என பலரும் தோனியை ஐந்தாம் வரிசையில் இறக்கி ரிஷப்புடன் ஆடவிட்டிருக்க வேண்டும் என்றும் அப்படி செய்திருந்தால் விக்கெட் இழப்பு ஏற்பட்டிருக்காமல் பார்ட்னர்ஷிப் அமைந்திருக்கும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். 

முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் அந்த முடிவை தவறானது என்று கூறினாலும் வழக்கம்போலவே அந்த முடிவை நியாயப்படுத்தினார் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. தோனியை ஏழாம் வரிசையில் இறக்காமல் முன்கூட்டியே இறக்கியிருந்தால் மொத்த விரட்டலும் செத்து போயிருக்கும் என்று கூறி அந்த முடிவை நியாயப்படுத்தினார். 

ஆனால் தோனியை பின்வரிசையில் இறக்கியதிலும் யாருக்கும் உடன்பாடில்லை. ரவி சாஸ்திரியின் விளக்கத்தையும் யாரும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. தோனியை ஐந்தாம் வரிசையில் இறக்காமல் ஏழாம் வரிசையில் இறக்கியதுதான் சேஸிங்கை கெடுத்தது என்பதில் சந்தேகமில்லை. 

அந்த முடிவு கண்டிப்பாக கேப்டன் கோலி எடுக்கவில்லை என்பது தெரிந்தது. ஏனெனில் போட்டிக்கு இடையே பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் சென்று கோலி கோபமாகவும் ஆக்ரோஷமாகவும் ஏதோ பேசினார். அந்த உரையாடல் கண்டிப்பாக தோனியை இறக்காதது குறித்துத்தான் என்பதில் சந்தேகமேயில்லை. இந்த முடிவு யார் எடுத்தது என்பதுதான் தெரியாமல் இருந்தது. 

தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியா, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்காரா என்பது உறுதியாக தெரியாமல் இருந்தது. இதுதொடர்பான பல கருத்துகள் உலாவந்தன. இந்நிலையில், தோனியை ஏழாம் வரிசையில் இறக்கிவிட்டது பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தான் என்ற தகவல் வெளிவந்துள்ளது. 

எத்தனையோ பேட்டிங் ஜாம்பவான்கள் இருக்கும்போது சர்வதேச கிரிக்கெட்டில் பெரியளவில் ஆடிய அனுபவம் இல்லாத சஞ்சய் பங்கார் மாதிரியான ஆட்களை பயிற்சியாளராக நியமித்தால் இதுதான் நிலைமை. 
 

click me!