ரிஸ்வானை தவிர எல்லாரும் வேஸ்ட்.. முதல் டி20யில் சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் படுதோல்வி

By karthikeyan VFirst Published Sep 21, 2022, 9:41 AM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து அணி.
 

இங்கிலாந்து அணி 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. 7 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி கராச்சியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

இங்கிலாந்து அணி:

அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), டேவிட் மலான், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், மொயின் அலி (கேப்டன்), சாம் கரன், டேவிட் வில்லி, லூக் உட், அடில் ரஷீத், ரிச்சர்ட் க்ளீசன்.

இதையும் படிங்க - கேமரூன் க்ரீன், மேத்யூ வேட் காட்டடி.. முதல் டி20யில் கடின இலக்கை அடித்து இந்தியாவை வீழ்த்தி ஆஸி., அபார வெற்றி

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஹைதர் அலி, ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், உஸ்மான் காதிர், ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி.

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் வழக்கம்போலவே முகமது ரிஸ்வான் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினார். மற்ற அனைவரும் வழக்கம்போலவே சொதப்ப, ரிஸ்வான் மட்டும் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த ரிஸ்வான் 46 பந்தில் 68 ரன்கள் அடித்தார். 

பாபர் அசாம் 31 ரன்களும், இஃப்டிகார் அகமது 28 ரன்களும் அடித்து சிறிய பங்களிப்பு செய்ய, 20 ஓவரில் பாகிஸ்தான் அணி 158 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அணியில் வழக்கம்போலவே ரிஸ்வானை தவிர யாருமே சரியாக ஆடவில்லை. அதிலும் குறிப்பாக அந்த அணியின் மிடில் ஆர்டர் பிரச்னை தொடர்ந்து அந்த அணிக்கு பெரும் கவலையாக இருந்துவருகிறது. 

இதையும் படிங்க - ரோஹித், கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் அவர்..! இனிமேல் அதைப்பற்றி பேசாதீங்க.. கம்பீர் நறுக்

159 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம் அடித்தார். 40 பந்தில் 53 ரன்கள் அடித்தார். ஹாரி ப்ரூக் 25 பந்தில் 42 ரன்கள் அடிக்க, இலக்கு எளிதானது என்பதால் கடைசி ஓவரின் 2வது பந்தில் இலக்கை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

click me!