மொஹாலியில் இன்று இரவு நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் முக்கிய மைல்கல்லை எட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொஹாலியில் இன்று இரவு நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் முக்கிய மைல்கல்லை எட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலாவது ஆட்டம் மொஹாலியில் இன்று இரவு தொடங்குகிறது. இதில் விராட் கோலி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
undefined
ஆசியக் கோப்பையில் ஒரு சதம், 2 அரைசதம் உள்ளிட்ட 276 ரன்கள் குவித்தார் விராட் கோலி. அதுபோன்று இந்தத் தொடரிலும் தனது மகத்தான ஃபார்மை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்தத் தொடரில் விராட் கோலி ஒரு சதம் அடித்தால், சர்வதேச போட்டிகளில் அதிக சதம் அடித்த ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் 71வது சதத்தை கடந்துவிடுவார். சர்வதேச போட்டிகளில் அதிகமான சதம் அடித்த 2வது வீரர் எனும் பெருமையை கோலி பெறுவார்.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக அதிகமான ரன் எடுத்த வீரர்களில் 2வது இடத்தைப்பிடிக்க விராட் கோலிக்கு இன்னும் 207 ரன்கள் மட்டுமே தேவை. 207ரன்கள் எடுத்தால் சர்வதேச அளவில் அதிகமான ரன் எடுத்த 6வது வீரராக கோலி மிளிர்வார்.
இந்தியாவுக்காக அதிக ரன் எடுத்த வீரர்களில் 3வதாகவும், சர்வதேச அளவில் 7வது இடத்திலும் கோலி தற்போது உள்ளார்.468 போட்டிகளில் விளையாடிய கோலி இதுவரை 24,002 ரன்கள் சேர்த்துள்ளார்.இதில் 71 சதங்கள், 124 அரைசதங்கள் அடங்கும்.
இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்தான் சர்வதேச அளவில் அதிகமான ரன் சேர்த்த 6வது வீரராக 24,208 ரன்களுடன் உள்ளார். கோலி 207 ரன்களை இந்தத் தொடரில் சேர்த்தால் திராவிட்டின் சாதனையை முறியடிப்பார்.
அதுமட்டுமல்லாமல் அனைத்துவிதமான டி20 போட்டிகளிலும் 11 ஆயிரம் ரன்களை கோலி எட்டுவதற்கு இன்னும்98 ரன்கள்தான் தேவை.தற்போது கோலி 349 டி20 போட்டிகளில் 10,902 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 6 சதங்கள், 8அரைசதங்கள் அடங்கும்.
டி20 போட்டிகளில் அதிகமான ரன் சேர்த்த வீரர்களி்ல் கிறிஸ் கெயில்(14,562)முதலிடத்திலும், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் மாலிக்(11,902) 2வது இடத்திலும் உள்ளனர். பொலார்ட் மூன்றாவது இடத்தில்(11,871) உள்ளார்.
ரோஹித் சர்மாவும் இந்த டி20 தொடரில் சாதனை படைக்க உள்ளார். டி20 போட்டி வரலாற்றில் அதிகமான சிக்ஸர் அடித்த வீரர்களின் சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 2 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்தப் போட்டியில் அடித்தால் உலகிலேயே டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெறுவார்.
தற்போது நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் 172 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 171 சிக்ஸர்களுடன் 2வது இடத்தில் உள்ளார். அதைத் தொடர்ந்து கெயில்(124), மோர்கன்(120), ஆரோன் பின்ச்(117) ஆகியோர் உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மாவின் டி20 போட்டி வெற்றி சதவீதமும் இந்தத் தொடரை வென்றால் அதிகரி்க்கும். தற்போது 39 போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா 31 போட்டிகளில் வென்று கொடுத்து, வெற்றி சதவீதத்தை 79.48 ஆக வைத்துள்ளார்.