கேமரூன் க்ரீன், மேத்யூ வேட் காட்டடி.. முதல் டி20யில் கடின இலக்கை அடித்து இந்தியாவை வீழ்த்தி ஆஸி., அபார வெற்றி

By karthikeyan VFirst Published Sep 21, 2022, 9:19 AM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.

இதையும் படிங்க - ரோஹித், கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் அவர்..! இனிமேல் அதைப்பற்றி பேசாதீங்க.. கம்பீர் நறுக்

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), கேமரூன் க்ரீன், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், நேதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா 11 ரன்னிலும் கோலி 2 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். மற்றொரு தொடக்க வீரரான கேஎல் ராகுல் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 35 பந்தில் 55 ரன்கள் அடித்து ராகுல் ஆட்டமிழந்தார்.

சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 25 பந்தில் 46 ரன்கள் அடித்தார். 4 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா காட்டடி அடித்து அரைசதம் அடித்தார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ஆஸ்திரேலிய பவுலிங்கை அடித்து நொறுக்கிய ஹர்திக் பாண்டியா 30 பந்தில் 71 ரன்களை குவிக்க, இந்திய அணி 20 ஓவரில் 208 ரன்களை குவித்தது.

இதையும் படிங்க - T20 World Cup: இந்திய அணி தெரிந்தே ரிஸ்க் எடுக்கிறது..! மிட்செல் ஜான்சன் எச்சரிக்கை

209 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கேமரூன் க்ரீன் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 30 பந்தில் க்ரீன் 61 ரன்கள் விளாசி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். ஸ்மித் 24 பந்தில் 35 ரன்கள் அடிக்க, பின்வரிசையில் அடித்து ஆடிய மேத்யூ வேட் 21 பந்தில் 45 ரன்களை விளாச, கடைசி ஓவரின் 2வது பந்திலேயே இலக்கை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

click me!