#ENGvsSL கடைசி ஒருநாள் போட்டி: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Jul 03, 2021, 09:13 PM IST
#ENGvsSL கடைசி ஒருநாள் போட்டி: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இலங்கை அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்திடம் 3-0 என ஒயிட்வாஷ் ஆகி தொடரை இழந்தது.

இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்துவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நாளை(ஜூலை4) நடக்கிறது. 

கடைசி போட்டியில் ஒரேயொரு ஆறுதல் வெற்றியையாவது பெறும் முனைப்பில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் நிலையில், இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

இங்கிலாந்து அணி தொடரை வென்றுவிட்டதால் கடைசி போட்டியில் முதலிரண்டு போட்டிகளில் ஆடாத சில வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), ஜேசன் ராய், ஜோ ரூட், ஒயின் மோர்கன்(கேப்டன்), சாம் பில்லிங்ஸ், லிவிங்ஸ்டோன், மொயின் அலி, லியாம் டாவ்சன், கிறிஸ் வோக்ஸ், ஜார்ஜ் கார்டோன், டாம் கரன்.

உத்தேச இலங்கை அணி:

குசால் பெரேரா(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஒஷாடா ஃபெர்னாண்டோ, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, தனஞ்செயா டி சில்வா, வஹிந்து ஹசரங்கா, தனஞ்செயா லக்‌ஷன், தசுன் ஷனாகா, சாமிகா கருணரத்னே, பினுரா ஃபெர்னாண்டோ, துஷ்மந்தா சமீரா, அசிதா ஃபெர்னாண்டோ.
 

PREV
click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!