#ENGvsPAK பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

By karthikeyan VFirst Published Jul 3, 2021, 8:39 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இங்கிலாந்து அணி இலங்கைக்கு எதிரான தொடரில் ஆடிவருகிறது. டி20 தொடரில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்ற இங்கிலாந்து அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வென்று ஒருநாள் தொடரையும் வென்றுவிட்டது. கடைசி ஒருநாள் போட்டி நாளை(ஜூலை4) நடக்கிறது.

இலங்கை தொடருக்கு பிறகு, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. 3  ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. 

வரும் 8ம் தேதி முதல் 20ம் தேதி வரை இந்த தொடர் நடக்கிறது. முதலில் ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில், ஒயின் மோர்கன் தலைமையிலான 16 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி:

ஒயின் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, டாம் பாண்ட்டன், சாம் பில்லிங்ஸ், சாம் கரன், டாம் கரன், லியாம் டாவ்சன், ஜார்ஜ் கார்டன், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.
 

click me!