Australia vs England: 2வது டெஸ்ட்டிலும் சொற்ப ரன்களுக்கு ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்த இங்கிலாந்து..!

Published : Dec 18, 2021, 04:08 PM IST
Australia vs England: 2வது டெஸ்ட்டிலும் சொற்ப ரன்களுக்கு ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்த இங்கிலாந்து..!

சுருக்கம்

ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 473 ரன்களை குவித்த நிலையில், இங்கிலாந்து அணி வெறும் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே நடத்தப்படும் பாரம்பரிய டெஸ்ட் தொடர் ஆஷஸ். ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு உலக கோப்பை போன்றது. அதனால் ஆஷஸ் தொடரில் இருநாடுகளுமே கடும் வெற்றி வேட்கையுடன் ஆடும். ஆனால் ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஆடுவதை பார்த்தால், வேட்கையுடன் ஆடுவதாக தெரியவில்லை. 

2020-2021ம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சரியாக ஆடாத இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி முழுக்க முழுக்க இங்கிலாந்து மீது ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றி பெற்றது. 

இதையடுத்து 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 16 தொடங்கி நடந்துவருகிறது. அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக இது நடந்துவருகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் (95) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (93) ஆகிய இருவரும் சதத்தை தவறவிட்ட நிலையில், சதமடித்த மார்னஸ் லபுஷேன் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் (18), கேமரூன் க்ரீன் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், அலெக்ஸ் கேரி (51), மிட்செல் ஸ்டார்க் (39) மற்றும் மைக்கேல் நெசெர் (35) ஆகிய மூவரும் நன்றாக ஆட, 473 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஹசீப் ஹமீத் (6) மற்றும் ரோரி பர்ன்ஸ் (4) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் அடித்திருந்தது இங்கிலாந்து அணி. 

ஜோ ரூட்டும் டேவிட் மலானும் 3ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். அவர்கள் இருவரும் அபாரமாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 138 ரன்களை சேர்த்தனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், ரூட் 62 ரன்னிலும், மலான் 80 ரன்னிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் இங்கிலாந்து பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிந்தது. அதன்பின்னர் ஸ்டோக்ஸ் 34 ரன்களும், வோக்ஸ் 24 ரன்களும் அடித்தனர். ஆலி போப், ஜோஸ் பட்லர் ஆகியோர் ஏமாற்றமளித்ததால் வெறும் 236 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.

ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும் நேதன் லயன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 237 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவருகிறது ஆஸ்திரேலிய அணி.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: மாஸ் காட்டும் பாண்டியா.. 3வது T20யில் படைக்கப்போகும் புதிய சாதனை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!