West Indies vs England: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

Published : Mar 07, 2022, 02:35 PM IST
West Indies vs England: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் படுமட்டமாக விளையாடி 4-0 என தோற்ற இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் முனைப்பில் உள்ளது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆண்டிகுவாவில் நாளை(8ம் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஜோ ரூட் தலைமையிலான 12 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத் ஆகிய இருவரும் இடம்பெறவில்லை. ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அணியில் உள்ளனர். காயம் காரணமாக முதல் போட்டிக்கான அணியில் ஃபாஸ்ட் பவுலர் ஆலி ராபின்சன் இடம்பெறவில்லை.

மார்க் உட், ஓவர்டன், கிறிஸ் வோக்ஸ், சாகீப் மஹ்மூத் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி:

ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜாக் க்ராவ்லி, பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), டேனியல் லாரன்ஸ், ஜாக் லீச், அலெக்ஸ் லீஸ், சாகிப் மஹ்மூத், க்ரைக் ஓவர்டன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ: சிஎஸ்கே முன்னாள் வீரர் ருத்ரதாண்டவம்.. 2வது ஓடிஐயில் இந்தியாவை பந்தாடிய நியூசிலாந்து!
IND vs NZ: அதிரடி வீரர் கணித்தபடியே 2வது ஓடிஐயில் சொதப்பிய ரோகித், விராட் கோலி.. யார் சாமி இவரு!