#INDvsENG 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு..! தாறுமாறான மாற்றங்கள்

By karthikeyan VFirst Published Feb 12, 2021, 4:05 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான 12 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகள் சென்னையில் நடந்துவருகின்றன. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் நாளை சென்னையில் தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 12 வீரர்கள் கொண்ட அணியை கேப்டன் ஜோ ரூட் அறிவித்தார். இங்கிலாந்து அணியில் வீரர்களுக்கு ஓய்வளிக்கும் விதமாக சுழற்சி முறையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அந்தவகையில் 4 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், மிரட்டல் ஃபாஸ்ட் பவுலர் ஆர்ச்சர் மற்றும் ஆஃப் ஸ்பின்னர் டோமினிக் பெஸ் ஆகிய நால்வரும் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ், ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர் மொயின் அலி மற்றும் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆலி ஸ்டோன் ஆகிய ஐவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆலி ஸ்டோன் மட்டும் ஆடும் லெவனில் இருக்கமாட்டார்.

12 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, லாரன்ஸ், ஜோ ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஆலி போப், பென் ஃபோக்ஸ்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி, ஜாக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஆலி ஸ்டோன்.
 

click me!