திருமணத்திற்கு ரெடியான கே எல் ராகுல்: நியூசியாலாந்து தொடரில் ஓய்வு!

Published : Jan 14, 2023, 03:16 PM IST
திருமணத்திற்கு ரெடியான கே எல் ராகுல்: நியூசியாலாந்து தொடரில் ஓய்வு!

சுருக்கம்

திருமணத்திற்கு தயாரானதால், நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் கே எல் ராகுல் இடம் பெறவில்லை.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நாளை நடக்கிறது. இதற்காக இரு வீரர்களும் திருவனந்தபுரம் சென்றுள்ளனர். இலங்கைத் தொடரைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கே எல் ராகுல் திருமணம் காரணமாக அவர் இடம் பெறவில்லை. இதே போன்று அக்‌ஷர் படேல் குடும்ப கடமைகள் காரணமாக இடம் பெறவில்லை.

சேட்டக்கார பசங்களா இருக்காங்களே: ஆட்டம் ஓவராத்தான் இருக்கு: வைரலாகும் கோலி, இஷான் கிஷான் டான்ஸ் வீடியோ!

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் அணியில் இடம் பெற்றுள்ளனர். இதே போன்று ரஞ்சி டிராபி தொடரில் அசாம் அணிக்கு எதிரான அதிரடியாக ஆடிய மும்பை வீரர் பிரித்வி ஷா 373 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் தனது திறமையை பிசிசிஐக்கு நிரூபித்த நிலையில் அவர் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றுள்ளார். ஆனால், ஒரு நாள் தொடரில் இடம் பெறவில்லை.

அடுத்தடுத்த போட்டிகளில் பார்ல் ராயல்ஸ், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி!

கே எல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி ஆகியோருக்கு வரும் 23 ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் வைத்து இவர்களது திருமணம் நடக்க இருக்கிறது. திருமணத்திற்கு முன்னதாக வரும் 21 ஆம் தேதி சங்கீத நிகழ்ச்சியும், மெஹந்தி நிகழ்ச்சியும் நடக்கிறது. அதியா ஷெட்டியின் சகோதரர் மற்றும் பெற்றோர்களும் இந்த சங்கீத நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அதியா ஷெட்டியின் திருமணம் குறித்து அவரது விக்கிப்பீடியா பக்கத்தில் நேற்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இன்று அந்தப் பக்கத்திலிருந்து அவரது திருமண செய்தி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வாய்ப்பு கொடுத்த ரஞ்சி டிராபி சாதனை: நியூசிலாந்துக்கு எதிரான டி20 அணியில் இடம் பிடித்த பிரித்வி ஷா!

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கே எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஆகிய இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாலும் ஓகே சொன்னதைத் தொடர்ந்து இந்த திருமணம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமண நிகழ்ச்சியில் விராட் கோலி, எம் எஸ் தோனி, அக்‌ஷய் குமார், ரோகித் சர்மா, சல்மான் கான், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் பலர் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.

நியூசிலாந்து தொடரைத் தொடர்ந்து இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் கே எல் ராகுல் இடம் பெற்றுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்ட்டியில் கே எல் ராகுல் இடம் பெற்றுள்ளார்.

வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் கிரிக்கெட் வீராங்கனை: அணியில் இடம் பெறாதது தான் காரணமா?

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!