சேட்டக்கார பசங்களா இருக்காங்களே: ஆட்டம் ஓவராத்தான் இருக்கு: வைரலாகும் கோலி, இஷான் கிஷான் டான்ஸ் வீடியோ!

By Rsiva kumarFirst Published Jan 14, 2023, 1:21 PM IST
Highlights

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து விராட் கோலி மற்றும் இஷான் கிஷான் டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கைக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடான் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 39.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், இலங்கை அணியில் அறிமுகமான நுவானிடு பெர்னாண்டோ 50 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பந்து வீச்சு தரப்பில் இந்திய அணி சார்பில் சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டும், அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்தடுத்த போட்டிகளில் பார்ல் ராயல்ஸ், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி!

இதையடுத்து 216 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணியில் கே எல் ராகுல் 64 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். ஹர்திக் பாண்டியா 36 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 43.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே டி20 தொடரை 2-1 என்ற கைப்பற்றிய நிலையில் தற்போது ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது.

மீண்டும் வாய்ப்பு கொடுத்த ரஞ்சி டிராபி சாதனை: நியூசிலாந்துக்கு எதிரான டி20 அணியில் இடம் பிடித்த பிரித்வி ஷா!

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் கொல்கத்தா ஈடன் கார்டன் விராட் கோலி மற்றும் இஷான் கிஷான் டான்ஸ் ஆடி மகிழந்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடரிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்திய அணியில் இஷான் கிஷான் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கே எல் ராகுல் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோர் குடும்ப கடமைகள் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்று பிசிசியை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் கிரிக்கெட் வீராங்கனை: அணியில் இடம் பெறாதது தான் காரணமா?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி திருவனந்தபுரத்தில் மைதானத்தில் நாளை நடக்கிறது. இதற்கான இந்திய அணி திருவனந்தபுரம் வந்துள்ளனர். இந்திய வீரர்களுக்கு திருவனந்தபுரத்தில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

Virat Kohli & Ishan Kishan dancing during the light show at Eden. pic.twitter.com/WRw8Xb5msC

— Johns. (@CricCrazyJohns)

 

click me!