நமக்கு எது நல்லா வருதோ அதையே செய்ய வேண்டியதுதானே!! ஏன் இந்த வேண்டாத வேலை..?

By karthikeyan VFirst Published Oct 12, 2019, 2:24 PM IST
Highlights

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி படுமோசமாக சொதப்பிவருகிறது. பவுலிங்கில் சொதப்பி இந்திய அணியை ரன்களை குவிக்கவிட்ட தென்னாப்பிரிக்க அணி, பேட்டிங்கிலும் மோசமாக செயல்பட்டது. 
 

புனேவில் கடந்த 10ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 601 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கை திறம்பட எதிர்கொள்ளமுடியாமல் முதல் 5 விக்கெட்டுகளை 53 ரன்களுக்கே இழந்துவிட்டது. 

ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான புனே ஆடுகளத்தில் தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர்களே சோபிக்காதபோது, ஸ்பின்னர்கள் என்ன செய்திருக்க போகிறார்கள். ஃபாஸ்ட் மற்றும் ஸ்பின் பவுலர்கள் இருதரப்புமே சோபிக்கவில்லை. ஆனால் இந்திய பவுலர்களோ, இருதரப்புமே அசத்திவருகின்றனர். 

முதல் 5 விக்கெட்டுகளை ஃபாஸ்ட் பவுலர்கள் வீழ்த்த, அடுத்த 3 விக்கெட்டுகளை ஸ்பின் பவுலர்கள் தான் வீழ்த்தினர். 5 விக்கெட்டுக்கு பிறகு பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிக்கொண்டிருந்த டுப்ளெசிஸ்-டி காக் ஜோடியை அஷ்வின் தான் பிரித்தார். டி காக்கை கிளீன் போல்டாக்கி அனுப்பிய அஷ்வின், டுப்ளெசிஸையும் வீழ்த்தினார். 

முதல் போட்டியிலும் சரி, இந்த போட்டியிலும் சரி.. அஷ்வினின் பவுலிங்கை தடுத்து ஆடாமல் அடித்து ஆடினார் டுப்ளெசிஸ். அஷ்வின் குட் லெந்த் ஏரியாவில் வீசிய பந்தை காலை மடக்கி மண்டியிட்டு அருமையாக ஸ்வீப் ஷாட் ஆடி பவுண்டரிகளாக விளாசிய டுப்ளெசிஸ், தனக்கு அபாரமாக ஆடவரும் ஸ்வீப் ஷாட்டையே தொடர்ந்து ஆடியிருக்கலாம்.

அதைவிடுத்து ஒரு பந்தை தடுத்தாட முயன்றார். அந்த பந்தில் வீழ்ந்தார். அஷ்வின் நல்ல லெந்த்தில் வீசிய பந்துகளை எல்லாம், பந்து பிட்ச் ஆகி எழும்போதே காலை மடக்கி அடித்த டுப்ளெசிஸ், அதே லெந்த்தில் வீசப்பட்ட ஒரு பந்தை தடுத்தாட முயன்று, ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார்.

அதற்கு அவர் அந்த பந்தை அடித்தே ஆடியிருக்கலாம். டுப்ளெசிஸின் விக்கெட்டுக்கு பிறகு, ஃபிளாண்டரும் கேசவ் மஹாராஜும் விக்கெட்டை எளிதில் விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற உறுதியில் நன்றாகவே ஆடிவருகின்றனர். 
 

click me!