இலங்கை டூருக்கான இந்திய அணியின் கேப்டனாக அவரைத்தான் நியமித்திருக்கணும்.. தவானை போட்டாங்க - முன்னாள் வீரர்

Published : Jun 13, 2021, 10:15 PM IST
இலங்கை டூருக்கான இந்திய அணியின் கேப்டனாக அவரைத்தான் நியமித்திருக்கணும்.. தவானை போட்டாங்க - முன்னாள் வீரர்

சுருக்கம்

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் கேப்டனாக மனீஷ் பாண்டே தான் நியமிக்கப்பட்டிருக்க வேண்டுமென முன்னாள் கிரிக்கெட் வீரர் Dodda கணேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.  

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஜூலை 13 முதல் 25 வரை இந்த தொடர் நடக்கவுள்ளது. இந்த காலக்கட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய மெயின் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் ஆடவிருப்பதால், அடுத்தகட்ட இந்திய அணி இலங்கைக்கு செல்லவுள்ளது.

விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகிய முக்கியமான வீரர்கள் இங்கிலாந்து தொடரில் ஆடுவதால், இளம் வீரர்களுக்கு இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), புவனேஷ்வர் குமார்(துணை கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதிஷ் ராணா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கௌதம், க்ருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சகாரியா.

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அணியின் சீனியர் வீரர் என்ற முறையில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் கேப்டனாக தவான் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மனீஷ் பாண்டேவைத்தான் கேப்டனாக நியமித்திருக்க வேண்டுமென Dodda கணேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கணேஷ், கேப்டன்சிக்கு சீனியாரிட்டியைத்தான் பார்த்தார்கள் என்றால் இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் கேப்டனாக மனீஷ் பாண்டேவைத்தான் நியமித்திருக்க வேண்டும். புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மனீஷ் பாண்டே நல்ல அனுபவமிக்கவர். இந்திய அணியுடன் நிறைய சுற்றுப்பயணங்களுக்கு சென்றிருக்கிறார். சீனியாரிட்டி அடிப்படையில் மனீஷ் பாண்டே தான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கணேஷ் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 15 வயதில் உலகளாவிய அங்கீகாரம்.. 'TIME 100 Next' பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி.. மெகா சாதனை!
Asian Games 2026: இஷான் கிஷான் சரவெடி.. இலங்கையை துவம்சம் செய்த இந்தியா.. பைனலில் பாகிஸ்தானுடன் மோதல்!