இந்திய அணியின் பேட்டிங், பவுலிங், பீலிடிங் பயிற்சியாளர்கள் யார் யார் தெரியுமா?

Published : Jul 10, 2024, 06:02 PM IST
இந்திய அணியின் பேட்டிங், பவுலிங், பீலிடிங் பயிற்சியாளர்கள் யார் யார் தெரியுமா?

சுருக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்ட நிலையில் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்கள் பற்றி கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தவர் கவுதம் காம்பீர். ஆனால், அதற்கு முன்னதாக 2022 மற்றும் ஆண்டுகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு ஆலோசகராக இருந்து 2 முறையும் அணியை பிளே ஆஃப் வரை கொண்டு சென்றார். அதன் பிறகு தான் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தனது கொல்கத்தா அணிக்கு திரும்பினார். இந்த ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணியானது 3ஆவது முறையாக டிராபியை வென்றது. அதற்கு முன்னதாக காம்பீர் தலைமையிலான கேகேஆர் அணியானது 2 முறை டிராபி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேகேஆர் டிராபி வென்றதைத் தொடர்ந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமனம் செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்து அணிக்கு டி20 உலகக் கோப்பை டிராபி பெற்று கொடுத்தார். இந்த தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்தது.

இதையடுத்து தான் கவுதம் காம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். காம்பீரின் தலைமையின் கீழான இந்திய அணியானது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியா தொடர், சாம்பியன்ஸ் டிராபி 2025, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2025, 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து தொடர் 2025, 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நியூசிலாந்து 2026 தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2027 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2027 தொடரில் விளையாடுகிறது. வரும் 2027 ஆம் ஆண்டு வரையில் அதுவும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரையில் தான் காம்பீர் பயிற்சியாளராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மகளிர் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் காதலன் யார் தெரியுமா? – வைரலாகும் ரொமாண்டிக் போட்டோஸ்!

இந்த நிலையில் தான், காம்பீரைத் தொடர்ந்து அவரது குழுவில் இடம் பெறும் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்கள் யார் யார் என்ற கேள்வி எழுந்தது. இதில், கேகேஆர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த அபிஷேக் நாயர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

அபிஷேக் நாயர் மற்றும் டி திலீப்:

அபிஷேக் நாயரது சிறப்பான பேட்டிங் பயிற்சியால் வியந்த காம்பீர் அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக கொண்டு வர விருப்பம் தெரிவித்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இதுதவிர பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் தொடர்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Rohit Sharma is not Captain : ரோகித் சர்மா கிடையாது – பாண்டியாவா? ராகுலா? இலங்கை தொடருக்கு யார் கேப்டன்?

லட்சுமிபதி பாலாஜி அல்லது வினய் குமார்:

இந்த நிலையில் தான் பவுலிங் பயிற்சியாளராக லட்சுமிபதி பாலாஜி அல்லது வினய் குமார் ஆகியோரில் யாரெனும் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் காம்பீருடன் ஏற்கனவே விளையாடி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ODI & Test Captain - Rohit.
Coach - Gambhir.
Batting Coach - Abhishek Nayar.
Bowling Coach - Zaheer or Balaji. [ANI]
Fielding Coach - T Dilip. [Dainik Jagran]

It's time for Champions Trophy 2025. 🇮🇳 pic.twitter.com/V7YJy8XAwy

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?