கோலி தலைமையிலான அணி தான் பெஸ்ட் இந்திய அணி..! தினேஷ் கார்த்திக் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 9, 2021, 6:30 PM IST
Highlights

விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி தான் மிகச்சிறந்த இந்திய அணி என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துவிதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து, சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. 

ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை 2 முறை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, ஃபைனலில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், ரிஷப் பண்ட், புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், ரஹானே, சூர்யகுமார் யாதவ், ஷிகர் தவான், ஷுப்மன் கில், பிரித்வி ஷா என மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களையும், பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், தீபக் சாஹர், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ஆகிய மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களையும், அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சாஹல், ராகுல் சாஹர், க்ருணல் பாண்டியா என சிறந்த ஸ்பின்னர்களையும் கொண்ட நல்ல பேலன்ஸான அணியாக திகழ்கிறது.

இந்நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்த இந்திய அணி தான் இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த அணி என்று சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டிய நிலையில், தினேஷ் கார்த்திக்கும் அதே கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக், தற்போதைய இந்திய அணி தான் மிகச்சிறந்த அணி. அஜித் வடேகரின் இந்திய அணியை 1971ல் நான் பார்த்ததில்லை. ஆனால் தற்போதைய இந்திய அணி பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் பலவிதமான திறமைகளை கொண்ட நல்ல கலவையிலான சிறந்த அணியாக திகழ்கிறது.

இதுதான் மிகவும் வலுவான அணி என்று நினைக்கிறேன். மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்கள், உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள், தலைசிறந்த பேட்ஸ்மேன்கள், மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்கள் என நல்ல பேலன்ஸான, கலவையான சிறந்த அணியாக திகழ்கிறது என்று தினேஷ் கார்த்திக் புகழாரம் சூட்டினார்.
 

click me!