#ICCWTC ஃபைனலில் எந்தவீரர் அதிக ரன்களை குவிப்பார்? அகார்கர், இர்ஃபான் பதான், ஸ்டைரிஸ், பார்த்திவ்படேல் கருத்து

By karthikeyan VFirst Published Jun 9, 2021, 4:16 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் எந்த பேட்ஸ்மேன் அதிக ரன்களை குவிப்பார் என்று முன்னாள் வீரர்கள் அஜித் அகார்கர், இர்ஃபான் பதான், பார்த்திவ் படேல், ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18-22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஃபைனலில் மோதுகின்றன.

சமபலம் வாய்ந்த இரு அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுவதால் அந்த போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இரு அணிகளுமே மிகச்சிறந்த வீரர்களை கொண்ட மற்றும் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் சமபலத்துடன் திகழும் அணிகள் ஆகும். இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட் என வலுவான பேட்டிங் ஆர்டர் இருக்கிறது என்றால் நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், டாம் லேதம், கான்வே, ஹென்ரி நிகோல்ஸ் என சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

இந்திய அணியில் பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின், சிராஜ், ஜடேஜா ஆகியோர் என்றால், நியூசிலாந்து அணியில் டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், கைல் ஜாமிசன், இஷ் சோதி, ஃபெர்குசன் ஆகியோர் உள்ளனர்.  இப்படியாக இரு அணிகளும் மிகச்சிறந்த வீரர்களை கொண்ட சமபலம் வாய்ந்த சிறந்த அணிகள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

இந்நிலையில், சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்கள் பலர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடவுள்ள நிலையில், யார் அதிக ரன்களை குவிப்பார் என்று முன்னாள் வீரர்கள் அஜித் அகார்கர், ஸ்காட் ஸ்டைரிஸ், இர்ஃபான் பதான் மற்றும் பார்த்திவ் படேல் ஆகியோர் கருத்து கூறியுள்ளனர். அந்த தேர்வுகளை பார்ப்போம்.

அஜித் அகார்கரின் தேர்வு - விராட் கோலி

பார்த்திவ் படேலின் தேர்வு - புஜாரா

இர்ஃபான் பதானின் தேர்வு - கேன் வில்லியம்சன்

ஸ்காட் ஸ்டைரிஸின் தேர்வு - டெவான் கான்வே 

click me!