இந்திய டெஸ்ட் அணியில் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது போன்று தமிழக வீரரான பாப இந்திரஜித்திற்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இங்கிலாந்திற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிகபட்சமாக 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. இந்த டெஸ்ட்டில் இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் அறிமுகம் செய்யப்பட்டார். அவர் முதல் இன்னிங்ஸில் 62 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். 2ஆவது இன்னிங்ஸில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் தான் சர்ஃபராஸ் கானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது போன்று தமிழக வீரரான பாபா இந்திரஜித்திற்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சர்ஃபராஸ் கான் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடினார். அதே போன்று பாபா இந்திரஜித்திற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டால் அவரும் சிறப்பாக விளையாடுவார்.
ரஞ்சி டிராபியில் கடந்த சில சீசன்களாக சிறப்பாக விளையாடி வருகிறார். விரைவில் இந்திய ஏ அணியில் பாபா இந்திரஜித் தேர்வு செய்யப்படுவார். அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.