அஷ்வினை எடுக்காதது மர்மமாவே இருக்கு.. அதை என்னால் ஜீரணிக்கவே முடியல..! இந்திய முன்னாள் வீரர் ஆதங்கம்

By karthikeyan VFirst Published Aug 29, 2021, 8:02 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சீனியர் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஷ்வின் சேர்க்கப்படாதது குறித்த அதிருப்தியையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சீனியர் அஷ்வின் அணியில் எடுக்கப்படவில்லை. அதுவே கடும்  விமர்சனத்துக்குள்ளானது. எல்லா கண்டிஷனிலும் சிறப்பாக பந்துவீசக்கூடிய சீனியர் ஸ்பின்னரும் மேட்ச் வின்னருமான ரவிச்சந்திரன் அஷ்வினை, கண்டிஷனை கருத்தில்கொள்ளாமல் அனைத்து டெஸ்ட் போட்டியிலும் ஆடவைக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் லண்டன் லார்ட்ஸில் நடந்த 2வது டெஸ்ட்டில் கண்டிஷன் மேகமூட்டமாக இருந்ததால் ஸ்பின்னிற்கு ஒத்துழைப்பு இருக்காது என்பதால் அஷ்வின் எடுக்கப்படவில்லை.

3வது டெஸ்ட் நடக்கும் லீட்ஸ் ஆடுகளமும் கண்டிஷனும் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், அஷ்வினை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறினர். இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் வீரர்களே அதைத்தான் தெரிவித்தனர்.

ஆனால் 3வது டெஸ்ட்டிலும் அஷ்வினை எடுக்கவில்லை. 3வது டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வியையும் தழுவியது. அஷ்வின் புறக்கணிப்பு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அஷ்வின் புறக்கணிப்பு குறித்து பேசியுள்ள திலீப் வெங்சர்க்கார், அஷ்வின் அணியில் எடுக்கப்படாதது எனக்கு மர்மமாகவே இருக்கிறது. அணியின் பெஸ்ட் ஸ்பின்னரை புறக்கணிப்பதை என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. இந்திய அணி எஞ்சிய போட்டிகளில் ஜெயிக்க வேண்டுமென்றால், 6 பேட்ஸ்மேன்கள்(விக்கெட் கீப்பர் தவிர) மற்றும் 4 பவுலர்களுடன் ஆட வேண்டும் என்று திலீப் வெங்சர்க்கார் கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!