ரூ.43 ஆயிரம் சம்பளத்திற்கு தோனிக்கு வந்த வேலை வாய்ப்பு? எந்த கம்பெனி தெரியுமா?

By Rsiva kumar  |  First Published Jul 25, 2023, 3:39 PM IST

எம்.எஸ்.தோனியின் பழைய வேலைக்கான அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் அண்மையில் வெளியானது அதில். தோனியின் சம்பளம் ரூ.43 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்ட நிலையில் தற்போது அவரது ஆண்டு வருமானம் ரூ.1040 கோடி ஆகும்.


இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி, கடந்த 2004 ஆ ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடினார். தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை, கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

பிசிசிஐ மீடியா உரிமைக்காக போட்டி போடும் மீடியாக்கள் என்னென்ன? காரணம் என்ன?

Tap to resize

Latest Videos

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் இருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி வாங்கி கொடுத்தார். ஐபிஎல் மூலமாக வருடந்தோறும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தோனிக்கு ஒரு முறை வேலை வாய்ப்பு வந்தது. அதற்கான ஆஃபர் லெட்டர் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

WI vs IND ODI: நிக்கோலஸ் பூரன் இல்லை: இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!

ஆம், கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவிக்கு தோனிக்கு வேலை கிடைத்துள்ளது. அந்த வேலைக்கு தோனிக்கு ஆஃபர் லெட்டர் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வேலைக்கு அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ.43,000.

WTC Standings: 2ஆவது டெஸ்ட் போட்டி டிரா - 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா, நம்பர் 1ல் பாகிஸ்தான்!

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் என்பது ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என் சீனிவாசனுக்கு சொந்தமான நிறுவனம். கடந்த 2012 ஆம் ஆண்டு அவருக்கு வேலை வழங்கிய அதே நிறுவனம் தான் அவரை ரூ.8.82 கோடிக்கு சென்னை அணியில் தக்க வைத்துக் கொண்டது. இந்த ஆஃபர் லெட்டரானது ஐசிசி மற்றும் பிசிசிஐயால் தடை செய்யப்பட்ட முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

WI vs IND 2nd Test: மழையால் டிரா ஆன 2ஆவது டெஸ்ட்: 1-0 என்று தொடரை கைப்பற்றிய டீம் இந்தியா!

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lalit Modi (@lalitkmodi)

 

click me!