”DRS"னா தோனி ரிவியூ சிஸ்டம்னு மீண்டும் ஒருமுறை நிரூபித்த தல.. வீடியோ

By karthikeyan VFirst Published May 11, 2019, 11:05 AM IST
Highlights

ரிவியூ கேட்பதில் தோனியை மிஞ்ச யாருமே இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை தரமாக நிரூபித்துள்ளார் தல. 
 

ரிவியூ கேட்பதில் தோனியை மிஞ்ச யாருமே இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை தரமாக நிரூபித்துள்ளார் தல. 

ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையே நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் நன்றாக ஆடினர். அவர்களது விக்கெட்டுக்கு பிறகு ஆட்டம் மந்தமானது. சீரான இடைவெளியில் டெல்லி அணியின் விக்கெட்டுகளை சிஎஸ்கே ஸ்பின்னர்கள் வீழ்த்தினர். முன்ரோ, ஷ்ரேயாஸ், ரூதர்ஃபோர்டு, அக்ஸர் படேல் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால், மறுமுனையில் நின்ற ரிஷப் பண்ட்டால் துணிச்சலாக அடித்து ஆடமுடியவில்லை. கடைசி ஓவரில் போல்ட், இஷாந்த் சர்மா ஆகியோர் சிக்ஸர் விளாச 147 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது டெல்லி அணி. 

148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கேவிற்கு தொடக்க வீரர்கள் வாட்சனும் டுபிளெசிஸும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதனால் சிஎஸ்கேவின் வெற்றி எளிதானது. 19வது ஓவரில் இலக்கை எட்டி சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

தோனி ரிவியூ கேட்கிறார் என்றாலே அது பெரும்பாலும் கண்டிப்பாக அவர் சார்ந்த அணிக்கு சாதகமான முடிவைத்தான் பெற்றுத்தரும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதை மீண்டும் ஒருமுறை டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நிரூபித்தார். 

டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா தோனியின் ரிவியூ சிஸ்டத்தால் ஆட்டமிழந்தார். தீபக் சாஹர் வீசிய 3வது ஓவரின் மூன்றாவது பந்தை பிரித்வி ஷா பேட்டில் அடிக்காமல் மிஸ் செய்தார். அது கால்காப்பில் பட்டது. அதற்கு கள நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. இதையடுத்து உடனடியாக தோனி ரிவியூ கேட்டார். அந்த பந்து ஸ்டம்பிற்கு மேலே செல்லும் அளவிற்கு பவுன்ஸ் ஆனது போல் இருந்தது. அதனால்தான் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் ரிவியூவில் பந்து மிடில் ஸ்டம்பின் மேல் பட்டதை அடுத்து பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். 

அது ஒரு அரை வாய்ப்புதான். ஒருவேளை பந்தின் பாதி பகுதிக்கு மேல் ஸ்டம்பில் படவில்லை என்றால் அம்பயர் காலின் அடிப்படையில் அது அவுட் இல்லாமல் போயிருக்கும். ஆனால் அந்த பந்தின் லெந்த்தை சரியாக கணித்து தோனி ரிவியூ கேட்டார். அந்த வீடியோ இதோ.. 

click me!