டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனியை மறுபடியும் டென்சனாக்கிய தீபக் சாஹர்!! முகம் சிவந்த தல.. வீடியோ

By karthikeyan VFirst Published May 11, 2019, 10:27 AM IST
Highlights

சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் துடிப்பான டெல்லி அணிக்கும் தோனி தலைமையிலான அனுபவ சிஎஸ்கேவிற்கும் இடையேயான போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடந்தது. 
 

ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இறுதி போட்டி மட்டுமே மீதமுள்ளது. 

முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதையடுத்து நடந்த எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்தி டெல்லி கேபிடள்ஸ் அணி, இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொண்டது. 

சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் துடிப்பான டெல்லி அணிக்கும் தோனி தலைமையிலான அனுபவ சிஎஸ்கேவிற்கும் இடையேயான போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் நன்றாக ஆடினர். அவர்களது விக்கெட்டுக்கு பிறகு ஆட்டம் மந்தமானது. சீரான இடைவெளியில் டெல்லி அணியின் விக்கெட்டுகளை சிஎஸ்கே ஸ்பின்னர்கள் வீழ்த்தினர். முன்ரோ, ஷ்ரேயாஸ், ரூதர்ஃபோர்டு, அக்ஸர் படேல் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால், மறுமுனையில் நின்ற ரிஷப் பண்ட்டால் துணிச்சலாக அடித்து ஆடமுடியவில்லை. கடைசி ஓவரில் போல்ட், இஷாந்த் சர்மா ஆகியோர் சிக்ஸர் விளாச 147 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது டெல்லி அணி. 

148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கேவிற்கு தொடக்க வீரர்கள் வாட்சனும் டுபிளெசிஸும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதனால் சிஎஸ்கேவின் வெற்றி எளிதானது. 19வது ஓவரில் இலக்கை எட்டி சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

இந்த சீசனில் ஏற்கனவே ஒருமுறை தொடர்ச்சியாக நோ பால் வீசி மிஸ்டர் கூல் தோனியையே கடுப்பாக்கிய தீபக் சாஹர், நேற்றைய போட்டியில் மீண்டும் ஒருமுறை தோனியை டென்ஷனாக்கிவிட்டார். டெல்லி அணியின் இன்னிங்ஸின் போது இம்ரான் தாஹிர் வீசிய 17வது ஓவரின் நான்காவது பந்தை ரிஷப் பண்ட் லாங் ஆஃப் திசையில் தூக்கி அடித்தார். அங்கு ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த தீபக் சாஹர் அந்த பந்தை கேட்ச் பிடித்துவிட்டார். ஆனால் பவுண்டரி லைன் தூரத்தை கணக்கிட்டு துல்லியமாக பிடிக்கவில்லை. மாறாக கேட்ச்சை பிடித்துவிட்டு பவுண்டரி லைனை மிதித்துவிட்டார். 

எளிதாக பிடித்திருக்க வேண்டிய கேட்ச் வாய்ப்பை முக்கியமான நேரத்தில் தீபக் சாஹர் விட்டதால் தோனி கடும் அதிருப்தியடைந்ததோடு கோபமும் அடைந்தார். அவரது கோபம் முகத்திலேயே வெளிப்பட்டது. அந்த வீடியோ இதோ..

ரிஷப்பை அந்த ஓவரில் வீழ்த்தியிருந்தால் இன்னும் குறைந்த ஸ்கோரில் டெல்லி அணியை சுருட்டியிருக்கலாம். ரிஷப் பண்ட் பவர் ஹிட்டர் என்பதால் டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடிவிடுவார். அப்படியிருக்கையில், 17வது ஓவரில் ரிஷப்பை வீழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைத்து அதை கோட்டைவிட்டால் கோபம் வரத்தானே செய்யும். ஆனால் அதற்கு பிரதிபலனாக ரிஷப்பின் விக்கெட்டை தீபக் சாஹரே வீழ்த்திவிட்டார். அத்துடன் அந்த கேட்ச்சை விட்டதால் பெரிய பாதிப்பு ஏற்படும் அளவிற்கு ரிஷப் ஆடவில்லை. 
 

click me!