டெல்லி கேபிடள்ஸ் - சிஎஸ்கே மேட்ச்சை பார்க்க டிவில்லியர்ஸ் ஆர்வம்.. இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published May 10, 2019, 5:44 PM IST
Highlights

பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் என இளம் வீரர்களை கொண்ட அணி டெல்லி கேபிடள்ஸ். தவான், இஷாந்த் சர்மா என ஒருசில அனுபவ வீரர்களே டெல்லி அணியில் உள்ளனர். ஆனால் பாண்டிங் மற்றும் கங்குலி என்ற இருபெரும் ஜாம்பவான்கள் அந்த அணியை வழிநடத்துவது அந்த அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. 
 

ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது. 

எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்திய டெல்லி கேபிடள்ஸ் அணி, விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவுடன் மோதுகிறது. இளமைக்கும் அனுபவத்துக்கும் இடையேயான இந்த போட்டி என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

தோனி தலைமையிலான அனுபவ வீரர்கள் நிறைந்த சிஎஸ்கே அணிக்கு நிகராக இந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணி அபாரமாக ஆடிவருகிறது. தோனி, ரெய்னா, வாட்சன், டுபிளெசிஸ், இம்ரான் தாஹிர், ஜடேஜா, ஹர்பஜன் சிங், ராயுடு, முரளி விஜய் என முழுக்க முழுக்க அனுபவ வீரர்களை கொண்ட அணி சிஎஸ்கே.

அதற்கு அப்படியே நேரெதிராக பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் என இளம் வீரர்களை கொண்ட அணி டெல்லி கேபிடள்ஸ். தவான், இஷாந்த் சர்மா என ஒருசில அனுபவ வீரர்களே டெல்லி அணியில் உள்ளனர். ஆனால் பாண்டிங் மற்றும் கங்குலி என்ற இருபெரும் ஜாம்பவான்கள் அந்த அணியை வழிநடத்துவது அந்த அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. 

சிஎஸ்கேவில் பெஸ்ட் ஃபினிஷர் தோனி இருக்கிறார். அதேநேரத்தில் டெல்லி அணியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் இருக்கிறார். கிட்டத்தட்ட குருவிற்கும் சிஷ்யனுக்கும் இடையேயான போட்டி போன்றது இது. இருவரில் யார் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் போட்டியை முடித்துவைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தாறுமாறாக எழுந்துள்ளது. 

இதையே காரணமாக சுட்டிக்காட்டி இந்த போட்டியை காண ஆவலாக உள்ளதாக டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். டிவில்லியர்ஸ் ஆடும் ஆர்சிபி அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. இந்நிலையில், இளம் துடிப்பான டெல்லி அணிக்கும் அனுபவம் வாய்ந்த கூலான வீரர்களை கொண்ட சிஎஸ்கேவிற்கும் இடையேயான போட்டியை காண ஆவலாக உள்ளதாக டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். 
 

click me!