டெல்லி கேபிடள்ஸின் விதி இப்படியா அமையணும்..? தோனியிடம் வசமா சிக்கிய சின்ன பசங்க கூட்டம்

By karthikeyan VFirst Published May 10, 2019, 3:48 PM IST
Highlights

இந்த சீசனில் செம ஃபார்மில் அபாரமாக ஆடிக்கொண்டிருக்கும் சிஎஸ்கே கேப்டன் தோனி, இன்றைய போட்டியில் கண்டிப்பாக ருத்ரதாண்டவம் ஆடுவார். 

ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது. 

எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்திய டெல்லி கேபிடள்ஸ் அணி, விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவுடன் மோதுகிறது. இளமைக்கும் அனுபவத்துக்கும் இடையேயான இந்த போட்டி சுவாரஸ்யமானதாக இருக்கும். 

ஏற்கனவே இந்த சீசனில் செம ஃபார்மில் அபாரமாக ஆடிக்கொண்டிருக்கும் சிஎஸ்கே கேப்டன் தோனி, இன்றைய போட்டியில் வெளுத்து வாங்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஏனெனில் இன்றைய போட்டி நடக்க இருக்கும் விசாகப்பட்டினம் மைதானம் தோனியின் ஆஸ்தான மைதானம்.  அந்த மைதானத்தில் இதுவரை தோனி ஆடிய போட்டிகளில் சும்மா தெறிக்கவிட்டிருக்கிறார். 

இந்திய அணிக்கு வந்த புதிதில் தனது முதல் சர்வதேச சதத்தை பாகிஸ்தானுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் தான் அடித்தார் தோனி. 123 பந்துகளில் 148 ரன்களை குவித்தார். அதுமட்டுமல்லாமல் விசாகப்பட்டினத்தில் இதுவரை அவர் ஆடியுள்ள போட்டிகளில் தெறிக்கவிட்டிருக்கிறார். 2016ம் ஆண்டு ஐபிஎல்லில் புனே அணியில் இருந்த தோனி, பஞ்சாப் அணிக்கு எதிராக இங்கு நடந்த போட்டியில், 32 பந்துகளில் 64 ரன்களை குவித்தார். அக்ஸர் படேலின் ஒரே ஓவரில் 23 ரன்களை குவித்து மிரட்டினார். 

விசாகப்பட்டினத்தில் பொதுவாகவே தோனி வெளுத்துவாங்குவார். அதிலும் இந்த சீசனில் நல்ல ஃபார்மில் வேறு இருக்கிறார். எனவே இன்றைய போட்டியில் டெல்லி அணி தோனியிடம் சிக்கியுள்ளது. தோனியை டெல்லி அணி விரைவில் வீழ்த்த வேண்டும் அல்லது முடிந்தவரை ரன்னையாவது கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் டெல்லியின் நிலை பரிதாபமாகும். டெல்லி அணியில் டெத் ஓவர்களை சிறப்பாக வீசும் ரபாடாவும் இல்லை. எனவே அந்த அணியில் மற்ற பவுலர்களால் தோனியை கட்டுப்படுத்துவது கடினம். 

இந்த சீசனில்தான் டெல்லி அணி சிறப்பாக ஆடிவருகிறது. முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆடிவரும் டெல்லி அணி, தகுதிச்சுற்று போட்டியில் தோனியிடமா சிக்கிக்கொள்ள வேண்டும்..? முதன்முறையாக இறுதி போட்டிக்குள் நுழையும் டெல்லி அணியின் கனவு என்னாகிறது என்பதை பார்ப்போம்.
 

click me!