என்னதான் இருந்தாலும் நீ சின்ன பையன்.. உன்ன டாமினேட் பண்ண விட்டா எனக்கு என்ன மரியாதை..? செம கெத்து காட்டிய தல

By karthikeyan VFirst Published Feb 28, 2019, 10:47 AM IST
Highlights

இரண்டாவது டி20 போட்டியில் ராகுல் அபாரமாக ஆடினார். ஆனால் அவரது ஆட்டத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. அவரது விக்கெட்டுக்கு பிறகு தவான், ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, அதன்பிறகு கோலியும் தோனியும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் இரண்டு போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்தது இந்திய அணி.

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் அரைசதம் அடித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு உதவிய மேக்ஸ்வெல், பெங்களூருவில் நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியிலும் அபாரமாக ஆடி சதமடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்தார். 

191 ரன்கள் என்ற இலக்கை மேக்ஸ்வெல்லின் அதிரடி சதத்தால் எளிதாக எட்டி வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 2-0 என டி20 தொடரை வென்றது. இந்திய மண்ணில் முதன்முறையாக டி20 தொடரை வென்று சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. 

இந்த போட்டியில் ராகுல் அபாரமாக ஆடினார். ஆனால் அவரது ஆட்டத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. அவரது விக்கெட்டுக்கு பிறகு தவான், ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, அதன்பிறகு கோலியும் தோனியும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். முதல் போட்டியில் மந்தமாக ஆடிய தோனி, இந்த போட்டியில் களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடினார். 

நேற்றைய போட்டியில் தோனி மற்றும் கோலி ஆகிய இருவருமே ஒரு மைல்கல்லை எட்ட காத்திருந்தனர். ஒரே போட்டியில் இருவருமே அந்த மைல்கல்லை எட்ட இருந்ததால், இருவரும் எட்டுவார்களா..? யார் முதலில் எட்டுவார்? என்பன போன்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. பெங்களூரு மைதானத்தில் தோனி கில்லி. அதேபோல ஆர்சிபி அணியில் ஆடுவதால் கோலிக்கும் அது பழக்கப்பட்ட மைதானம்.

ஆனால், கோலிக்கு வாய்ப்பளிக்காமல் தோனிதான் அந்த சம்பவத்தை முதலில் செய்தார். நேற்றைய போட்டியில் ஆடுவதற்கு முன்னதாக சர்வதேச டி20 போட்டியில் தோனி 49 சிக்ஸர்களுடனும் கோலி 48 சிக்ஸர்களுடனும் இருந்தனர். 50 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்ட தோனி ஒரு சிக்ஸரும் கோலி 2 சிக்ஸர்களும் அடிக்க வேண்டியிருந்தது. 

ராகுல் அவுட்டானதும் 8வது ஓவரிலேயே களத்திற்கு வந்தார் கோலி. அதன்பிறகு தவான் மற்றும் பண்ட் ஆகிய இருவரும் ஆட்டமிழந்த பிறகு 11வது ஓவரில் தோனி களத்திற்கு வந்தார். 11வது ஓவரில் வந்த தோனி, 13வது ஓவரிலேயே சிக்ஸர் விளாசி 50 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டினார். அதன்பிறகு 15வது ஓவரில் நேற்றைய போட்டியில் தனது முதல் சிக்ஸரை அடித்த கோலி, குல்டர் நைல் வீசிய 16வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து அந்த ஓவரில் 50 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 

கோலியா தோனியா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், 50 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை அடைவதில் கோலிக்கு முன்பாக முந்திக்கொண்டார் தோனி. 
 

click me!