24 வயசுலயே என் பேட்டிங்கிற்கு நான் கியாரண்டி கொடுக்க முடியாது; 40 வயசுல எப்படி கியாரண்டி கொடுக்க முடியும்-தோனி

By karthikeyan VFirst Published Apr 20, 2021, 5:58 PM IST
Highlights

24 வயதில் இருக்கும்போதே என் பேட்டிங்கிற்கு என்னால் கியாரண்டி கொடுக்க முடியாது; அப்படியிருக்கையில் 40 வயதில் எப்படி கொடுக்க முடியும் என்று தோனி தெரிவித்துள்ளார்.
 

தோனி அவரது ஆரம்பகாலத்தில் மிரட்டலான அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். இந்திய அணிக்காகவும் சிஎஸ்கேவுக்காகவும் பலமுறை வெற்றிகரமாக போட்டிகளை முடித்துக்கொடுத்து சிறந்த ஃபினிஷராக திகழ்ந்திருக்கிறார். 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, கடந்த 2 சீசன்களாகவே சரியாக ஆடவில்லை. கடந்த சீசனில் மொத்தமாகவே வெறும் 200 ரன்கள் மட்டுமே அடித்தார் தோனி. 2019 சீசனில் ஆர்சிபிக்கு எதிராக தோனி அரைசதம் அடித்ததுதான். அதன்பின்னர் இதுவரை ஐபிஎல்லில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த கடந்த ஐபிஎல் சீசனில் அதிரடியாக ஆடி வேகமாக ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிய தோனி, இந்த சீசனிலும் திணறிவருகிறார். ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் கூட, சிஎஸ்கே பெரிய ஸ்கோரை நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் களத்திற்கு வந்த தோனி, ராகுல் டெவாட்டியாவின் ஓவரை முழுதாக முழுங்கினார். பெரிய ஷாட் கனெக்ட் ஆகாமல் திணறிய தோனி 17 பந்தில் 18 ரன் அடித்து ஆட்டமிழந்தார்.

தோனியால் சிஎஸ்கே ஜெயித்த காலம்போய், தோனியின் மந்தமான பேட்டிங்கால் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் குறையும் நிலை வந்துவிட்டது. 

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டிக்கு பின்னர் தனது பேட்டிங் குறித்து பேசிய தோனி, நாங்கள் இன்னும் கூடுதலாக ஸ்கோர் செய்திருக்க வேண்டும். நான் முதல் 6 பந்தில் ரன் அடிக்காதது ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாம் ஆடும்போது, நம்மை யாரும் அன்ஃபிட் என்று சொல்லிவிடக்கூடாது. அந்தவகையில் என்னை யாரும் அன்ஃபிட் என்று சொல்லிவிடவில்லை. தற்போதைய வீரர்கள் வேகமாக ரன் ஓடுகிறார்கள். அவர்களுக்கு சவால் விடுவதை நினைக்கும்போது நன்றாக இருக்கிறது. நான் 24 வயதிலேயே எனது பேட்டிங்கிற்கு கியாரண்டி கொடுக்க முடியாது; அப்படியிருக்கையில், 40 வயதில் எப்படி நான் கியாரண்டி கொடுக்க முடியும் என்று தோனி விளக்கமளித்தார்.
 

click me!