கோலியை தவறவிட்ட ஐபிஎல் அணி.. தட்டி தூக்கிய ஆர்சிபி..! 12 ஆண்டுக்கு பின் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்

By karthikeyan VFirst Published Jun 25, 2020, 3:12 PM IST
Highlights

ஐபிஎல்லில் விராட் கோலியை எடுக்காமல் டெல்லி டேர்டெவில்ஸ்(இப்போது டெல்லி கேபிடள்ஸ்) அணி தவறவிட்ட சம்பவம் குறித்து ஐபிஎல் முன்னாள் சி.ஒ.ஒ சுந்தர் ராமன் தெரிவித்துள்ளார். 
 

ஐபிஎல்லில் விராட் கோலியை எடுக்காமல் டெல்லி டேர்டெவில்ஸ்(இப்போது டெல்லி கேபிடள்ஸ்) அணி தவறவிட்ட சம்பவம் குறித்து ஐபிஎல் முன்னாள் சி.ஒ.ஒ சுந்தர் ராமன் தெரிவித்துள்ளார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராகவும், இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும் திகழும் விராட் கோலி, 2008ல் அண்டர் 19 உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்தவர். 

விராட் கோலி அண்டர் 19 இந்திய அணியின் கேப்டனாக, உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த அடுத்த ஒரே மாதத்தில், ஐபிஎல் முதல் சீசனுக்கான ஏலம் நடந்தது. அந்த ஏலத்தில் இளம் வீரர் விராட் கோலியை ஆர்சிபி அணி எடுத்தது. அன்றிலிருந்து இன்றுவரை ஆர்சிபி அணியில் மட்டுமே ஆடிவரும் விராட் கோலி, அந்த அணியின் கேப்டனாக கடந்த சில ஆண்டுகளாக இருக்கிறார். 

இந்தளவிற்கு தலைசிறந்த பேட்ஸ்மேனாக கோலி உருவாவார் என்றோ, புகழின் உச்சிக்கு செல்வார் என்றோ எதிர்பார்த்தெல்லாம், ஆர்சிபி அணி அன்றைக்கு கோலியை ஏலத்தில் எடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு கோலி தலைசிறந்து விளங்குகிறார். 

விராட் கோலி அண்டர் 19 உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்தும் கூட, அவரது சொந்த மண்ணான டெல்லி அணி அவரை ஐபிஎல் ஏலத்தில் எடுக்கவில்லை. அவரை டெல்லி அணிதான் ஏலமெடுக்கும் என பலரும் நினைத்திருந்தனர். ஆனால் கோலியை எடுக்காமல், பிரதீப் சங்வான் என்ற பவுலரை எடுத்தது. 

இந்நிலையில், விராட் கோலியை டெல்லி அணி ஏலத்தில் எடுக்காதது குறித்து கவுரவ் கபூருடனான உரையாடலில், ஐபிஎல்லின் முன்னாள் சி.ஒ.ஒ சுந்தர் ராமன் பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய ராமன், ஐபிஎல் முதல் சீசனுக்கான ஏலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான், அண்டர் 19 உலக கோப்பையை இந்திய அணிக்கு கோலி வென்று கொடுத்தார். அண்டர் 19 வீரர்கள் மட்டும் தனியாக ஏலத்தில் விடப்பட்டார்க. அப்போது டெல்லி அணி விராட் கோலியை எடுக்காதது பெரும் சர்ப்ரைஸாக இருந்தது.

ஆனால் அவர்களுக்கு பவுலர் தேவையென்பதால், பிரதீப் சங்வானை எடுத்தனர். சேவாக், டிவில்லியர்ஸ் ஆகிய பேட்ஸ்மேன்களை அணியில் பெற்றிருந்த டெல்லி அணிக்கு, அப்போது ஒரு பவுலர் தான் தேவைப்பட்டது என்பதால் கோலியை எடுக்காமல் பிரதீப் சங்வானை எடுத்தது. இதையடுத்து கோலியை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது. அடுத்து நடந்ததெல்லாம் வரலாறு என்று சுந்தர் ராமன் தெரிவித்தார். 

ஐபிஎல்லில், ஆர்சிபி அணிக்கு கோலியால் ஒருமுறை கூட கோப்பையை வென்று கொடுத்து, ஆர்சிபி அணியின் கனவை நனவாக்க கோலியால் முடியவில்லை. ஆனால் ஐபிஎல்லில் 5412 ரன்களை குவித்துள்ள கோலி, அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனைக்கும் பெருமைக்கும் சொந்தக்காரராக திகழ்கிறார். 

இதில் சுவாரஸ்யமான மற்றும் துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், கோலியை எடுக்க தவறிய டெல்லி அணி மற்றும் கோலியை எடுத்த ஆர்சிபி இந்த அணிகளுமே இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் டைட்டிலை வெல்லவில்லை. 
 

click me!